“அரசியல் ஆதாயங்களுக்காக பாஜகவால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகளின் பட்டியல்” என்ற தலைப்பில் காங்கிரஸ் தலைவர் கவ்ரவ் பாந்தி வெளியிட்ட பட்டியல் தற்போது வைரல் ஆகி வருகிறது. இது சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை அதிர வைத்துள்ளது. அவரது பட்டியல் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு கீழே தரப்பட்டுள்ளது. இதை அவர் #பயங்கரவாதிகளுடன் பாஜக என்ற ஹேஷ் டாகுடன் பதிவு செய்துள்ளார்.
1) தாரிக் அஹமது மிர் – ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியதற்காக என்ஐஏவால் கைது செய்யப்பட்டார்.
2) துருவ் சக்சேனா – மத்தியப் பிரதேச பாஜக தலைவர் எடிஎஸ் (பயங்கரவாத எதிர்ப்புப் படை) ஆல் கைது செய்யப்பட்டார், இந்திய இராணுவத்திற்கு எதிராக உளவு பார்த்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்காக பணிபுரிந்தவர் இவர்.
3) தாவேந்தர் சிங் – முன்னாள் டிஎஸ்பி, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கு ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேற உதவி செய்தவர்.
4) நாதுராம் கோட்சே – மகாத்மா காந்தி படுகொலை செய்தவர், சுதந்திர இந்தியாவில் முதல் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்.
5) முகமது ஃபரூக் கான் – பாகிஸ்தானில் மசூத் அசாரால் பயிற்சி பெற்றவர், காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.
6) மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரக்யா தாக்கூர், பயங்கரவாதக் குற்றங்களுக்காக பாஜக அரசால் முதலில் கைது செய்யப்பட்டார்.
7) மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பிரக்யா தாக்கூருடனான மற்றொரு பயங்கரவாதி பாஜக ஆதரவு பிரசாத் புரோகித்.
8) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்ற சத்வந்த் சிங், அகாலி-பாஜக கூட்டணியால் தொடர்ந்து கௌரவிக்கப்படுகிறார்.
9) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்த பியாந்த் சிங், அகாலி-பாஜக கூட்டணியால் தொடர்ந்து கௌரவிக்கப்படுகிறார்.
10) பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கைக் கொலை செய்ததற்காக தண்டிக்கப்பட்ட பல்வந்த் சிங் ரஜோனாவை விடுதலை செய்ய அகாலி-பாஜக கூட்டணி பல முறை வலியுறுத்தி வந்துள்ளது.
11) ஜக்தார் சிங் ஹவாரா – பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கை படுகொலை செய்த குற்றவாளி. மேலும் அவருக்கு காலிஸ்தானி அணிகளின் ஆதரவு உள்ளது என்ற உண்மை தெரிந்திருந்தும் அடிக்கடி அவரை விடுதலை செய்ய அகாலி-பாஜக கூட்டணி முயன்றது!
12) தேவிந்தர் பால் சிங் புல்லர் – 1993 இல் டில்லியில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பில் 9 பேரைக் கொன்ற காலிஸ்தானி பயங்கரவாதி. பஞ்சாபில் உள்ள அகாலி-பாஜக அரசு அவரை சிறையில் இருந்து விடுவிக்க முயன்றது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கடந்த காலத்தில் அவருக்கு கருணை காட்டப்படகோரினார்.
13) பல்ராம் சிங் – பஜ்ரங் தள் தலைவர், சமீபத்தில் பாகிஸ்தானில் மத்தியப் பிரதேசத்தில் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
14) மௌலானா மசூத் அசார் – 1999 இல் பாஜக அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டார், அஜித் தோவலால் முறையாக ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் பதான்கோட், புல்வாமா போன்ற இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை நிறுவினார்.
15) உமர் ஷேக் 1999 இல் பாஜக அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டார், அஜீத் தோவல் அவர்களால் அன்புடன் ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் பின்னர் அமெரிக்காவில் 9/11 தாக்குதலில் ஈடுபட்டார் மேலும் அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பேர்லின் கொலையிலும் ஈடுபட்டார்.
16) முஷ்டாக் அகமது சர்கார் – இவரும் 1999 இல் பிஜேபியால் மசூத் அசார் மற்றும் உமர் ஷேக் ஆகியோருடன் விடுதலை செய்யப்பட்டார், பின்னர் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்
17) அஸ்ஸாமைச் சேர்ந்த பாஜக தலைவர் நிரஞ்சன் ஹோஜாய், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றார்.
18) குக்கி தேசிய ராணுவம் – மணிப்பூரில் உள்ள தீவிரவாதக் குழு, 2019 மக்களவையில் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் மாநிலத்தில் வன்முறை மற்றும் மோசமான விளைவுகள் ஏற்படும் என அச்சுறுத்தியது.
19) ஜோமி ரீ-யூனிஃபிகேஷன் ஆர்கனைசேஷன் (ZRO), என்ற தீவிரவாத அமைப்பு , 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன், அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷாவுடன், தங்களுக்குச் சாதகமான வேட்பாளர்களுக்கு சீட்டு கேட்டுத் தொடர்பு கொண்டது. இந்த கோரிக்கையை பாஜக நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.
20) ஹபீஸ் சயீத் – வேத் பிரதாப் வைதிக், ராம்தேவின் நெருங்கிய உதவியாளர், ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர், 2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பாகிஸ்தானுக்குச் சென்று பயங்கரவாதி ஹைஃப்ஸ் சயீத்தை சந்தித்தார். இதில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தொடர்பு இருக்கவும் கூடும் எனினும் இது தொடர்பாக என்ஐஏ கொண்டோ அல்லது வேறு எந்த முகமையை கொண்டோ பாஜக அரசு ஒருபோதும் விசாரிக்கவில்லை.