கர்நாடக மாநிலத்தின் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா. இவர் சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக தொடர் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருபவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர். மோடியை நேசிக்கவில்லை என்றால் நீங்கள் ஆன்டி இந்தியன் என்பன போன்ற மூடத்தனமான கருத்துக்களை பேசியவர்.
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு, பாஜக எம்பி தேஜஸ்வி, ட்விட்டரில் பதிவிட்ட ஒரு கேடுகெட்ட ட்வீட் தற்போது அவரை கடும் சிக்கலில் தள்ளி உள்ளது.
“கடந்த சில நூற்றாண்டுகளாக 95% அரபு பெண்மணிகள் ‘புணர்ச்சிப் பரவசநிலையை’ அடைவதே இல்லை. அரபுலகில் உள்ள ஒவ்வொரு தாயும் காதல் கலக்காத உடலுறவினால் மட்டுமே குழந்தையை பெற்று கொள்கின்றனர்.”
-பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
மேலுள்ள ட்வீட்டை அறிவுள்ள எவர் வாசித்தாலும் அதை கண்டிக்காமல் இருக்கமாட்டார்கள் எனும் அளவிற்கு மிகவும் மோசமான கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதற்கு எதிர் கட்சியினர், பத்திரிகையாளர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இவரின் இந்த கருத்து அரபுலகிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடாக பிரபல அமீரக பெண் தொழிலதிபர் நூரா அல் குரைர் என்பவர் இவரை கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியாவில் சில சிறந்த பெண் தலைவர்கள் இருந்தும் கூட , பெண்களுக்கு மதிப்பளிக்க தெரியவில்லை உங்களுக்கு. உங்கள் வளர்ப்பு முறை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.ஒருவேளை உங்களுக்கு வெளியுறவு துறை அமைச்சகம் வழங்கப்படுமேயானால் அரபு நாடுகள் பக்கம் வந்து விட வேண்டாம், உங்களை நாங்கள் வரவேற்கவில்லை என கூறியுள்ளார்.
-நூரா அல் குரைர்
குவைத் வழக்கறிஞரும் சர்வதேச மனித உரிமைகள் இயக்குநருமான மெஜ்பெல் அல் ஷரிகாவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேபோல குவைத்தை சேர்ந்த அப்துர் ரஹ்மான் நாசர் என்பவர் தேஜஸ்வியை உடனே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுரித்தி உள்ளார்.
இந்நிலையில் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு அலை வலுத்து வந்ததால் அந்த டீவீட்டை நீக்கி உள்ளார் தேஜஸ்வி. எனினும் இத்தனை கீழ்த்தரமான கருத்தை தெரிவித்த பிறகும் டீவீட்டை நீக்கினாரே தவிர மன்னிப்பு கேட்கவில்லை.
இது அகம்பாவத்தின் வெளிப்பாடு இதனால் 130 கோடி இந்தியர்கள் அவமானப்படுகிறோம் என்ற ரீதியில் பல இந்தியர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதேபோல் கடந்த 2014 ல், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்களுக்கு எதிரான தனது மனோபாவத்தை வெளிப்படுத்தி இருந்தார் தேஜஸ்வி, அப்போதும் எதிர்ப்பு வலுக்கவே டீவீட்டை டெலிட் செய்தார் அவர்.
பல ஆண்டுகளாக இந்தியாவுடன் அரபு நாடுகள் நல்லுறவை பேணி வருகின்றன, எனினும் இந்தியாவில் வளர்ந்து வரும் இஸ்லாமோபோபியா மற்றும் பாஸிட்டுகளின் தொடர் பொய் பிரச்சாரத்தால், இந்த நிலை நீடிக்குமா என்பது கேள்விக்குறி தான்.