BJP Crimes Against Women

வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணுடன் பாலியல் லீலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கிய பாஜக அமைச்சர் ராஜினாமா!

நேற்று முதல் பல கன்னட தொலைக்காட்சி சேனல்களில் பாஜக அமைச்சர் ரமேஷ் அடையாளம் காணப்படாத ஒரு பெண்ணுடன் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவது போல அமைந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

பாதிக்கப்பட்டப் பெண்ணின் வழக்கறிஞரின் கூற்றுப்படி,வேலை வாங்கி தருவதாக கூறி பாஜக அமைச்சர் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும்படி கட்டாயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜர்கிஹோலி மாநில நீர்வள அமைச்சராக உள்ளார். வீடியோவில் உள்ள பெண்ணிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் சேட்டையில் அமைச்சர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தினேஷ் கல்லஹள்ளி என்ற சமூக ஆர்வலர் செவ்வாய்க்கிழமை ஜர்கிஹோலி மீது போலீசில் புகார் அளித்திருந்தார், பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இது பற்றி வெளியில் பேசினால் அவரையும் அவரது குடும்பத்தினரும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

இது குறித்து கர்நாடக முதல்வர் பி.எஸ். யெடியூரப்பா கட்சி சகாக்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார், மேலும் ஜர்கிஹோலியின் பதவி விலகலைக் குறித்து என்ன முடிவு எடுக்கப்படும் என விரைவில்அறிவிக்கப்படும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

60 வயதான ஜர்கிஹோலி அரசியல் ரீதியாக தீவிரமாக செயல்படும் நான்கு சகோதரர்களில் ஒருவர். அவர் முன்னர் காங்கிரசில் இருந்தார், மேலும் 17 காங்கிரஸ்-ஜனதா தளம் (மதச்சார்பற்ற) எம்.எல்.ஏ.க்களை கட்சியில் இருந்து வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது. மேலும் இவர் பாஜகவை ஆட்சி கட்டிலில் அமர வைக்க அரும்பாடுபட்டவராக அறியப்படுபவர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக அமைச்சர் வீடியோகளை கண்டு தான், அதிர்ச்சியுற்றதாகவும் மேலும் அந்த வீடியோக்கள் “100% போலியானவை” எனவும் இது குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

தமிழகத்தின் காவிரி குண்டாறு திட்டத்தை ஒரு போதும் ஏற்க முடியாது, இதை உச்சநீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக எதிர்ப்போம் என சில நாட்களுக்கு முன் டெல்லியில் பேட்டி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்டேட்:

எனினும் நாளை கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால் இன்றைக்குள்ளாகவே அமைச்சர் நீக்கப்படலாம் அல்லது அவரே ராஜினாமா செய்யலாம் என்ற கருத்து நிலவி வந்த நிலையில் தற்போது ரமேஷ் தானே முன் வந்து தார்மீக அடிப்படையில் பதவி விலகுவதாகவும், எனினும் நித்தி பாணியில் அந்த வீடியோவில் உள்ளது நானில்லை, நான் குற்றமற்றவன் என்றும் தெரிவித்துள்ளார்.