BJP Gujarat

குஜராத்: அண்டை வீட்டுகாரரின் மனைவியுடன் பாஜக தலைவர் தப்பி ஓட்டம்; 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் !

அகமதாபாத், குஜராத்: அண்டை வீட்டுகாரரின் மனைவியுடன் உறவு வைத்திருந்ததாகவும், அப்பெண்ணை அழைத்து கொண்டு ஓடி விட்டதற்காகவும் குஜராத் பாஜக செயற்பாட்டாளர் ஒருவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தில் உள்ள பருச் மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பருச் பாஜக நகரத்தின் யுவ மோர்ச்சாவின் பொதுச் செயலாளர் ஹிமான்ஷு வைத். இவர் அடிக்கடி தனது அண்டை வீட்டாரின் வீட்டுக்கு போவதும் வருவதுமாக இருந்ததாக பிரபல உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

அண்டை வீட்டுக்காரரின் மனைவி கடந்த சில நாட்களாக காணாமல் போனதால் குடும்பத்தார் அவரை தேடி வந்துள்ளனர். அதே சமயம் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹிமானையும் அவரது குடும்பத்தார் தேடி வந்துள்ளனர்.

இருவரின் தொலைபேசிகளும் வீட்டிலேயே விடப்பட்டிருப்பதை குடும்பத்தார் அறிந்து கொண்டனர்.மேலும் ஆய்வு செய்த பின்னர் அண்டை வீட்டுகாரரின் மனைவியுடன் ஹிமான்ஷு தப்பி ஓடிவிட்டார் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இது இரு குடும்பங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவருக்கும் இடையே கள்ள காதல் நீண்ட காலமாகவே இருந்ததாக கூறபடுகிறது. பாஜக தலைவருடன் ஓடி சென்ற அப்பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 23 அன்று, ஹிமான்ஷு வைதை கட்சியின் முதன்மை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் பாஜக மாவட்டத் தலைவர் மாருதி சிங் ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்தார்.