BJP Crimes Against Women

தலித் சமூக பெண் பாலியல் பலாத்காரம்; பாஜக தலைவர் கைது!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தலித் பெண், பாரதிய ஜனதா தலைவர் தேவேந்திர தம்ரகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, சிங்க்ராலி மாவட்டத்திலிருந்த பாஜகவின் ஊடக பொறுப்பாளர் தம்ரகர் கைது செய்யப்பட்டார்.

குற்றம் எப்போது நடந்தது?

கடந்த 2019 நவம்பர் 30 ஆம் தேதி தம்ரகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிசம்பர் 31 ஆம் தேதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். தம்ரகரிடம் தனது கணவர் வேலை பார்த்து வந்ததாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

குற்றச்சம்பவம்:

“குற்றம் நடைபெற்ற தினத்தில் தம்ரகர் எனது வீட்டுக்கு வந்தார். தான் வாரணாசிக்கு செல்ல உள்ளதாகவும் தன்னுடன் எனது கணவரும் நானும் வர வேண்டும் எனவும், அங்கு இருவருக்கும் சிங்க்ராலி மாவட்டத்தில் உள்ள தனது நண்பருக்கு சொந்தமான சுரங்கத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். மறுநாள் அவரது காரில் சிங்க்ராலியை சென்று அடைந்தோம்.

Related image

பிறகு அங்கு ஒரு தபாவில் தம்ரகர் என் கணவருக்கு அதிக அளவில் மதுபானம் குடிக்க செய்தார். பிறகு உனது கணவர் அதிகமாக குடித்து விட்டார். எனவே அவர் இங்கேயே இருக்கட்டும் நீ என்னுடன் வா, நான் உன்னை என் நண்பனின் சுரங்கத்திற்கு அழைத்து சென்று வேலை வாங்கி தருகிறேன் என கூறி அழைத்து சென்றார்.

ஆனால் அவர் என்னை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று பலவந்தமாக என்னை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினார். இதை பற்றி வெளியே யாரிடமும் சொன்னாலோ, போலீசில் புகார் கொடுத்தாலோ கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் என்னை மிரட்டினார்.” என பாதிக்கப்பட்ட அந்த பெண் தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட பாஜக தலைவர்:

பாஜக தலைவரின் மிரட்டலையும் தாண்டி அவர் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட தம்ரகர் கடந்த திங்களன்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க