மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக யுவமோர்ச்சா செயலாளரான பமீலா கோவாஸ்வாமி, பல லட்சம் மதிப்புடைய கொகைன் வைத்திருந்ததாக கைதி செய்யப்பட்டுள்ளார்.
பர்சில் கடத்தல்:
நேற்று, வெள்ளியன்று , அவர் சுமார் 100 கிராம் அளவிற்கு கொகைன் போதைப்பொருளை ஒரு கைப்பர்சில் ஒளித்து தன்னுடைய வாகனத்தின் ஓட்டுநர் இருக்கைக்கு கீழ் ஒளித்து வைத்திருந்தார், நியூ அலிப்பூர் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துக்காவலர்கள் பரிசோதனையில் இது கண்டிபிடிக்கப்பட்டது. அவருடன் காரில் இருந்த அவரது ஆண் நண்பர் பிரபீர் குமார் தே என்பவரும் கைது செய்யப்பட்டு என்.ஆர் அவன்யூ காவல் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
காவலர்களை தங்களது பணி செய்யவிடாமல் பமீலா கோவாஸ்மி கூச்சலிட்டு காவல் நிலையம் செல்ல மறுத்தார்.
இது குறித்த கருத்து தெரிவித்த மே.வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா பேசிய போது, இது திட்டமிட்ட சதி என்றும் பமீலாவின் காரில் யாரோ கொகைன் போதைப்பொருளை வைத்துவிட்டதாக தெரிவித்தார்.
பாஜக வின் லட்சணம்:
திரிணாமுல் காங்கிரஸ் பேச்சாளர் திருமதி.சந்திரிமா பட்டாச்சார்யா இதுபற்றி தெரிவித்தபோது.. பாஜகவின் லட்சணம் இதுதான், இதுபற்றி பேசவும் கருத்துக்கூறவும் அவமானகரமாக உள்ளது , இதற்கு முன்னரும் மேற்கு வங்கத்தில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்களை போலீஸ் கைது செய்துள்ளது, மேலும் பமீலா மற்றும் பிரபீர் இருவரும் ஒரே இடத்தில் வந்து சந்தித்து, இதேபோல காரில் இருந்தபடியே போதை பொருள் பண்டமாற்று செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் தான் இந்த பரிசோதனை நடைபெற்றது, இதனை மறுக்க இயலாதவர்கள், பமீலாவை பழிவாங்க நினைப்பதாக மடைமாற்றுவது சரியானதல்ல என்றார்.
2019ல், யுவமோர்ச்சா செயலாளராக பதவியேற்கும் முன் பமீலா, தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையும் சிலகாலம் விமானப்பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்த காரணத்தால் அவருக்கு பிரபல டிரக் டீலர்களோடு தொடர்புள்ளது தெரியவருகிறது.
மேலும் இவர் பல்வேறு பாஜக தலைவர்களோடு தொடர்பு கொண்டவராக இருப்பதற்கு ஆதரமாக பல்வேறு புகைப்படங்களை காணமுடிகிறது.
எனினும் நடிகை ரியா வை கழுவி குடித்து வந்த பாஜக வினர் ஒருவர் கூட இது குறித்து வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கின்றனர், மக்கள் மத்தியில் இதற்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது.