காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமாக்கள் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JDS ) ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பாஜகவில் இனைய ரூ .40 கோடி வழங்கியதாக கூறியுள்ளார். மேலும் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏவான ரமேஷ் ஜர்கிஹோலி பாஜக வில் இனைய ரூ .80 கோடி வரை பாஜகவிடம் பேரம் பேசிய போது தானும் உடன் இருந்ததாக தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை ஜே.டி (எஸ்) பெரியபட்னா எம்.எல்.ஏ கே மகாதேவ் செவ்வாய்க்கிழமை பொதுக் கூட்டத்தில் கூறினார். ஜர்கிஹோலி தனது ராஜினாமாவை சட்டமன்ற சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமாருக்கு கடந்த திங்களன்று அனுப்பியிருந்தார்.
மகாதேவ் கூறுகையில், “ரமேஷ் ஜர்கிஹோலி எனது முன்னிலையில் கட்சி தாவ ரூ .80 கோடி கேட்டார். அவர்கள் (பிஜேபி) என் அறையிலும் ரூ .40 கோடியை வைத்திருந்தார்கள், ஆனால் அவர்கள் அதை திரும்ப எடுத்துக் கொள்ளாவிட்டால் ஊழல் தடுப்பு பிரிவினரிடம் புகார் செய்வேன் என்று சொன்னேன். அவர்கள் எனக்கு 3 முறை பணம் கொடுத்தார்கள், ஆனால் நான் என் ஆன்மாவை பணத்திற்காக விற்கக்கூடாது. இது மிகவும் கீழ் தரமான அரசியல் என்று முடிவு செய்தேன். ”
பாஜக தலைவர்கள் எம்.எல்.ஏ.க்களை வேட்டையாட முயற்சிப்பதாகக் கூறி, ஆளும் கூட்டணியின் தரப்பில் பல ஆடியோ கிளிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த விஷயங்களில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது