பாஜக-வில் இணையுங்கள், ‘ஒரு மிஸ்டுகால்’ கொடுங்கள் என தொலைக்காட்சி, வானொலி என எங்கு பார்த்தாலும் தற்போது பாஜக-விற்கு ஆள் சேர்க்கும் வேலை முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது . அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் மத்தியிலும் ஆள் சேர்க்க முயன்று வருகிறது பாஜக .
அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை செய்ய வந்த பி.ஜே.பி.-யை எதிர்த்து புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 01.08.2019 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமை பறிக்கும் தேசிய கல்விக் கொள்கை மற்றும் தமிழகத்தை நாசமாக்கும் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, அணுக்கழிவு, எட்டு வழிச்சாலை போன்ற அபாயகரமான திட்டத்தைக் கொண்டு வரக்கூடிய பிஜேபியை கேள்வி எழுப்புவோம் ! தமிழகத்தை விட்டே விரட்டியடிப்போம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாணவர் அமைப்பினரின் இந்தப் போராட்டம் பல்கலைக்கழக மாணவர்களை நின்று கவனித்துக் கேட்கச் செய்தது.
நன்றி- வினவு தளம் (சிறிய மாறுதல்களுடன்)
தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி.
கடலூர், தொடர்புக்கு : 97888 08110.