அகில இந்திய போக்குவரத்து நலச்சங்கத்தின் அழைப்பின் பேரில் இந்தியா முழுக்கவுள்ள சுமார் 40,000 அமைப்புகள் இணைந்து நாளை பிப்ரவரி 26, வெள்ளியன்று, நடத்தும் பாரத் பந்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க அவற்றின் குடையின் கீழ் இயங்கும் அனைத்து கூட்டமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாளை லட்சக்கணக்கான லாரிகள் இயங்காது.
அகில இந்திய போக்குவரத்து நலச் சங்கத்தின் (ஏ.ஐ.டி.டபிள்யூ.ஏ) தேசியத் தலைவர் மகேந்திர ஆர்யா கூறுகையில், நாளை அனைத்து போக்குவரத்து நிறுவனங்களும் தங்கள் வாகனங்களை எதிர்ப்பின் அடையாளமாக இயக்காமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அனைத்து போக்குவரத்து குடோன்களும் நாளை எதிர்ப்பு பதாகைகளைக் காட்சி படுத்தும். மேலும் நாளை வெள்ளிக்கிழமை எந்தவொரு பொருளையும் முன்பதிவு செய்யவோ அல்லது ஏற்றவோ மாட்டோம் எனஅனைத்து வாடிக்கையாளர்களும் போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவிக்கும் எனவும் மகேந்திரா தெரிவித்தார்.
இதுவரை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் உள்ள லாரிகள் பந்த் அழைப்பை ஏற்று இதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
இ-வே பில்லை, இ-இன்வாய்ஸ் ஆக மாற்றி அமைக்கவும், பெட்ரோல் டீசலுக்கான விலையை உடனடியாக குறைக்க வேண்டியும் ஏ.ஐ.டி.டபிள்யூ.ஏ கோரிக்கை வைத்துள்ளது.
ஜிஎஸ்டி மற்றும் பெட்ரோல் விலையுயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் இருக்கும் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் அமைப்புகள் இந்த போராட்டத்தை நடத்த உள்ளனர் எனினும் தொலைக்காட்சி ஊடகங்களில் இது ஒரு பேச்சு பொருளாக்க படவில்லை.
அகில இந்திய எஃப்.எம்.சி.ஜி விநியோகஸ்தர்கள் சங்கம், அலுமினிய பாத்திரங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம், வட இந்தியா மசாலா வர்த்தகர்கள் சங்கம், அகில இந்திய ஒப்பனை உற்பத்தியாளர்கள் சங்கம், அகில இந்திய மகளிர் தொழில்முனைவோர் சங்கம் மற்றும் அகில இந்திய கணினி விற்பனையாளர் சங்கங்கள் ஆகியவை பந்தில் பங்கேற்கும் சில முக்கிய அமைப்புகளாகும்.
மாபெரும் போரட்ட அழைப்பாக பல்வேரு அமைப்புகள் ஒன்றிணைந்து பந்த் அழைப்பை விடுத்துள்ளனர் எனினும் ஊடகங்களில் வெகுவாக இச்செய்தி பகிரப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.