தில்லியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கிய அந்த ஞாயிறு இரவில் இந்த சிசோடியாவை முஸ்லிம் போராளிகள் ஒடோடிச் சென்று சந்தித்தார்கள்.
கூலிப்படையினர் படையெடுத்து வந்துள்ளார்கள். திட்டமிட்ட முறையில் தீ வைப்புகளும் சூறையாடல்களும் கை, கால்களை உடைக்கிற அளவுக்கு வன் கொடுமைகள் நடந்து வருகின்றன. ஏதாவது செய்யுங்கள் என்று குமுறினார்கள்.
இறுக்கமான முகத்துடன் அனைத்தையும் கேட்ட சிசோடியா, ‘தில்லி போலீஸ் எங்கக் கட்டுப்பாட்டில் இல்லை. I am same like you’ என சொல்லி இருக்கிறார்.
‘தாக்குதல் நடந்து வருகிற பகுதிகளுக்கு போனாலே போதும். புரோட்டோ கால் படி உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியக் கட்டாயத்துக்கு போலீசார் தள்ளப்படுவார்கள்’ என மன்றாடினார்கள் அந்தப் போராளிகள்.
அம்ரீஷ் பூரி என்கிற இந்திப் பட வில்லனைப் போன்று வழுக்கைத் தலையைத் தடவியவாறு சிசோடியா சொன்னார்: ‘அது முறையான செயல் ஆகாதே’.
எல்லாம் முடிந்த பிறகு எரிந்து அழிந்த வீடுகளையும் தெருக்களையும் பார்வையிடுவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் நேற்று வந்திருக்கிறார், இந்த சிசோடியா.
ஆக்கம்: அஜீஸ் லுத்ஃபுல்லா