Babri Masjid Indian Judiciary

‘இராமஜென்ம பூமி ‘ ஆவணம் தொலைந்து விட்டது – உச்சநீதிமன்றத்தில் நிர்மோஹி அகாரா-இந்து அமைப்பு அறிவிப்பு !

பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தின் உரிமை கோர எந்த ஆவணமும் எங்களிடம் இல்லை. 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற வழிப்பறியில் ஆவணங்கள் தொலைந்து போய்விட்டன என்று நிர்மோஹி அகாரா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

முன்னதாக அலகாபாத் 2010 உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில்  இந்து,முஸ்லிம், நிர்மோகி அகாரா ஆகிய மூன்று தரப்பினருக்கும் தலா ஒரு பங்கு என்று நிலத்தை மூன்றாக பங்கிட்டு தீர்ப்பு வழங்கியிருந்தது. இது பெரும் விமர்சனத்தை உண்டாக்கியது. இதனை தொடர்ந்து இரு தரப்பும் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன.

பிறகு உச்சநீதிமன்றம் பாபர்-அயோதி நில விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு சுமூகமான தீர்வை எட்டிட மூன்று நபர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. ஆனால் நான்கரை மாதம் ஆன நிலையிலும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. எனவே உச்ச நீதிமன்றம் இதுகுறித்து ஆகஸ்ட் 6 முதல் தினசரி வழக்கு தொடர்ச்சியாக நடைபெறும் என்று அறிவித்தது.

Photo:HT

இந்நிலையில் வழக்கின் இரண்டாவது நாளான புதன்கிழமை அன்று நடைபெற்ற வழக்கின் போது நீதிபதி நிர்மோகி அகாரா தரப்பை நோக்கி. ..        

 “இராமஜென்ம  பூமி குறித்து உங்களிடம் ஏதேனும் வாய்வழியான அல்லது ஆவண ரீதியான ஆதாரங்கள் உண்டா? “என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக 1982 ஆம் ஆண்டு ஒரு வழிப்பறி சம்பவம் நடந்தது என்றும் அப்போது நாங்கள் அனைத்து ஆவணங்களும் இழந்துவிட்டோம் என்று  ஐந்து நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வின் முன் நிர்மோகி அமைப்பின் வழக்கறிஞர் திரு.ஜெயின் பதில் அளித்தார்.

இதை தொடர்ந்து பல்வேறு விஷயங்களை கோடிட்டு பேசினார் நிர்மோகி அமைப்பின் வழக்கறிஞர் திரு.ஜெயின். ஆனால் வாதிட்ட எந்த ஒன்றிற்கும் ஆதாரத்தை கேட்டும் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி உங்கள் வாதத்திற்கு எந்த ஒரு அடிப்படை ஆவணமும் இல்லை, இனி வருங்காலங்களில் தயார் நிலையில் வரவும் என்று தலைமை நீதிபதி கடிந்து கொண்டார்.