ஆஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத்தீயால் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். கோடிக்கணக்கான விலங்குகளும் தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில் 10 ஆயிரம் ஒட்டகங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடியே சுட்டுக்கொல்லப் போவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் அவதி:
சூடான மற்றும் சங்கடமான சூழ்நிலைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கிறோம், உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது, ஏனென்றால் ஒட்டகங்கள் வந்து வேலிகளைத் தட்டுகின்றன, வீடுகளைச் சுற்றி வந்து ஏர் கண்டிஷனர்கள் மூலம் தண்ணீரைப் பெற முயற்சிக்கின்றன, ” என்று அவர் கூறினார்.
பழங்குடியின ஆஸ்திரேலிய மக்கள் வசிக்கும் உள்ளூராட்சி பகுதியின் நிர்வாக குழு உறுப்பினர் மரிட்டா பேக்கர், தனது கன்பி சமூகத்தில் ஒட்டகங்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார். சூடான மற்றும் சங்கடமான சூழ்நிலைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கிறோம், மக்களும் நோய்வாய் பட்டுள்ளனர், இதற்கு காரணம் ஒட்டகங்கள் வந்து எங்கள் வீடுகளை சுற்றியுள்ள வேலிகளை உடைத்தெறிந்து, தண்ணீரை குடித்து விடுகின்றன. வீடுகளின் ஏர் கண்டிஷனர்களில் உள்ள தண்ணீரையும் குடிக்க முயற்சிக்கின்றன என்று மேலும் அவர் கூறினார்.
ஒட்டகங்கள் கொல்லப்பட கூறப்படும் காரணங்கள்:
எனவே ஒட்டகங்கள் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால் அங்குள்ள மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் கார்பன்-டை-ஆக்சைடு அதிக அளவில் வெளியிடுவதன் மூலம் புவி வெப்பமயமாதலுக்கு காரணியாகவும் இந்த ஒட்டகங்கள் உள்ளதாக கூறி 10,000 ஒட்டகங்களை கொல்ல அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த 5 நாட்களில் ஒட்டகங்கள் அனைத்தும் சுட்டு கொல்லப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.