Australia Sikhs

ஆஸ்திரேலியா: சீக்கியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாசிஸ்டுகள் !

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள இந்திய சீக்கியர்கள் குழு ஒன்றின் மீது கடந்த பிப்ரவரி 28 ஞாயிற்றுக்கிழமை , அடையாளம் தெரியாத சில பாசிஸ்டுகளால் தாக்குதலில் ஈடுபட்டனர்.

மேற்கு சிட்னியில் உள்ள ஹாரிஸ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் காரை நிறுத்தி, பேஸ்பால் மட்டைகள், சுத்தியல் மற்றும் கட்டைகளை கொண்டு அடித்து நொறுக்கினர்,இச்சமயம் சீக்கியர்கள் காரின் உள்ளே அமர்ந்திருந்தனர். இதனால் குறிப்பிடத்தக்க காயங்கள் ஏதுமின்றி தப்பினர், எனினும் பின்னர் அவர்கள் துரத்தப்பட்டு மீண்டும் தாக்கப்பட்டனர். காரின் விண்ட்ஸ்கிரீன் அடித்து நொறுக்கப்பட்டது.

“அவர்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் எங்களின் கார்களை அடித்து நொறுக்கினர், யார் வேண்டுமானாலும் கொல்லப்படிருக்கலாம்” என்று 7 நியூஸ் ஊடகத்திற்கு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். தலைப்பாகைகள் கொண்டு (சீக்கியர்கள் என) அடையாளம் காணப்பட்டு அவரும் அவரது நண்பர்களும் குறிவைக்கப்பட்டதாக அவர் கூறினார். “அவர்கள் ஏன் எங்களைப் பின்தொடர்கிறார்கள்? நீங்கள் சொல்லுங்கள். அவர்கள் ஏன் எங்களை வம்புக்கு இழுக்கிறார்கள்?” என கேட்கிறார் பாதிக்கப்பட்டவர்.

ஆஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் இன அடிப்படையிலான தாக்குதல் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேற்கு சிட்னியில் சீக்கியர்களுக்கும் மோடி அரசின் வேளாண் சட்டங்களின் ஆதரவாளர்களுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல் இன மற்றும் அரசியல் பதட்டங்களால் ஏற்பட்டதா என்பதை உறுதிப்படுத்த குழு அமைக்கப்பட்டு விசாரிணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊடகங்களுடன் பேசிய டர்பன்ஸ் 4 ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அமர் சிங், சீக்கியர்களின் கோயில்கள் கடந்த இரண்டு வாரங்களாக குறிவைக்கப்படுவதாகவும், நாளுக்கு நாள் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.