இலங்கையில் கொத்து கொத்தாக தமிழினப் படுகொலை நடந்த காலகட்டத்தில் உயிரை பாதுகாத்து கொள்ள பிரியா மற்றும் நடேசன் தம்பதியினர் கடல் மார்க்கமாக கப்பலில் தனிதனியாக 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சென்று தஞ்சம் அடைந்தனர். இவர்களுக்கு கோபிகா(4 வயது) தருணிகா(2 வயது) என்று 2 குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் பிறந்தனர்.
ஆஸ்திரேலியா சென்றடைந்தது முதல் பிலோலா என்ற பகுதியல் வசித்து வந்தனர்.இந்நிலையில் மார்ச் 5, 2018 அன்று, நான்கு பேர் கொண்ட குடும்பம் ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகளால் செர்கோ காவலர்களுடன் சேர்ந்து தமிழ் தமபதியினரின் வீட்டிற்குள் பலவந்தமாக புகுந்து அவர்களை ஆஸ்திரேலிய தலைநகரான மெல்போர்னிற்கு அழைத்து சென்று தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணியளவில், நடேசன் தம்பதி குடும்பத்தை மெல்போர்னில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கேற்ப இடையில் விமானம் டார்வினில் தரையிறங்கிய பின்னர் வெள்ளிக்கிழமை காலை, கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி மொர்டெச்சாய் ப்ரோம்பெர்க் கடைசி நிமிட தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்தார், இரண்டு வயது தருணிகாவை அடுத்த புதன்கிழமை வரை நாடுகடத்த கூடாது என்று தாமத உத்தரவு பிறப்பித்தார். அதனால் நடேசனின் குடும்பம் டார்வின் இராணுவ தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பிறகு வெள்ளிக்கிழமை பின்னிரவில் , டார்வினிலிருந்து கிறிஸ்துமஸ் தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் தான் ஆஸ்திரேலிய மக்கள் ஆயிரக்கணக்கில் வீதிகளில் ஒன்றிணைந்து தமிழ் குடுமபத்தினரை நாடு கடத்த கூடாது என்றும் அவர்களை ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஒருமித்த குரலாக போராட்டடத்தில் ஈடுபட்டனர்.
ட்விட்டர் லும் கூட #hometobilo #AusPol #LetThemStay போன்ற ஹாஷ்டாகின் மூலம் ட்ரெண்ட் செய்து ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் மோரிசன் அரசு மக்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
மக்களின் தொடர் போராட்டம் நம்மை இன்னமும் மனிதம் இறந்து விடவில்லை என்பதை உணர்த்துகிறது. ஒரு குடும்பத்திற்கு ஆதரவாகவே இத்தனை பெரிய போராட்டம் நடக்கும் நிலையில் லட்ச கணக்காக காஷ்மீர் மக்கள் விஷயத்திலும் கூட தற்போது அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளதாக செய்தி வெளியிட்டு வருவதாகட்டும் , காஷ்மீர் மக்களுக்காக போராடுவதாகட்டும் அதுவும் வெளி நாட்டவர்களே (இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் ) அதிக எண்ணிக்கையில் உள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.