Education Hindutva Muslim Universities Saffronization Uttar Pradesh

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் இருந்து பாகிஸ்தானிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நீக்கம்!

உபி: புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களான மௌலானா அபுல் அலா மௌதூதி மற்றும் சையத் குதுப் ஆகியோரின் புத்தகங்களை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக (AMU) நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

முஸ்லிம் கல்வி நிலையங்களில் மூக்கை நுழைக்கும் இந்துத்துவாவினர்:

இந்துத்துவா ஆர்வலர் மது கிஷ்வர் மற்றும் பிற இந்து மேலாதிக்க தேசியவாத கல்வியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

இந்த புத்தகங்கள் ஏ.எம்.யுவின் இஸ்லாமிய துறையின் இளங்கலை மற்றும் முதுகலை பாடத்திட்டத்தில் கற்பிக்கப்பட்டு வந்தன.

“சமூக ஆர்வலரும் கல்வியாளருமான மது கிஷ்வர், மேலும் சில கல்வியாளர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, அதில் இந்த ஆசிரியர்களின் புத்தகங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் AMU வை மட்டும் பெயரிடவில்லை, ஜாமியா மிலியா இஸ்லாமியா, ஹம்தார்ட் பல்கலைக்கழகம், என இந்த அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்கள் பாடத்திட்டத்தில் பாகிஸ்தானிய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் பாடத்திட்டத்தில் வைத்துள்ளதாக கூறினர் ” என்று ஏ.எம்.யுவின் மூத்த ஸ்டாப் ஒருவர் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

“சர்ச்சையைத் தவிர்ப்பதற்காக, மௌதூதி மற்றும் ஷஹீத் உள்ளிட்ட இஸ்லாமிய சிந்தனையாளர்கள் குறித்த விருப்பத் தாளை உடனடியாக ரத்து செய்ய பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது,” என்று பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷஃபே கித்வாய் தெரிவித்துள்ளார்.

மௌதூதி மற்றும் சயத் குதுப்:

மௌதூதி, பிரிட்டிஷ் இந்தியாவிலும், பின்னர், பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலும் செயல்பட்ட இஸ்லாமிய அறிஞர், ஜமாத்-இ-இஸ்லாமியின் நிறுவனர் ஆவார். மௌலானா மௌதூதி தனது ஆக்கங்களில் இந்து விரோத கருத்துக்களை தெரிவித்துள்ளதாக இந்துத்துவாவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

குதுப், ஒரு எகிப்திய எழுத்தாளர், இஸ்லாமிய அறிஞர் மற்றும் புரட்சியாளராக கருதப்படுபவர், 1950 கள் மற்றும் 1960 களில் “எகிப்திய முஸ்லிம் சகோதரத்துவ”அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

அழுத்தத்தில் நடவடிக்கை?

AMU வின் இஸ்லாமிய ஆய்வுத் துறைத் தலைவர் பேராசிரியர் முஹம்மது இஸ்மாயில் கூறுகையில், “இந்தப் புத்தகங்கள் சர்ச்சைக்குரிய எதையும் ஊக்குவிக்கவில்லை. நீண்ட காலமாக AMU பாடத்திட்டத்தில் உள்ளது. எனினும் அனைத்துப் பாடத்திட்டங்களில் இருந்தும் பாகிஸ்தானிய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட அனைத்து புத்தகங்களையும் நீக்க வாரியம் முடிவு செய்துள்ளது.” என்றார்.