மேற்கு வங்காளத்தின் நம்கானாவில் வியாழக்கிழமை, அமித் ஷாவின் பேரணியின் போது, சில பெண்கள் அவருக்கு கருப்பு கொடியைக் காட்டினர், இதனால் நிகழ்ச்சி தாற்காலிகமாக சிறிது நேரம் தடைப்பட்டது.
அமித் ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் மீறி ஷாவுக்கு முன்னால் கறுப்புக் கொடிகளுடன் கோஷம் எழுப்பினர் என மேற்கு வங்காள நாளேடான சங்க்பாத் பிரதிடினின் செய்தி வெளியிட்டுள்ளது.
பெண்கள் தடைகளையும் மீறி எதிர்ப்பு தெரிவித்ததால் இதை சற்றும் எதிர்பாராத அமித் ஷாஅதிர்ந்து போனார், உடனே நிலைமையை சமாளிக்கும் முகமாக இந்த பெண்களை அனுப்பி, குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர் மம்தா பானர்ஜி தான் என்று ஆதாரமின்றி கூறினார்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரத் காவல்துறை அதிகாரிகள் இறுதியில் பெண்களை பேரணி மைதானத்திலிருந்து வெளியேற்றுவதற்கு பலபிரியோகம் செய்ய வேண்டியதாயிற்று.
பின்னர் கூட்டத்தில் பேசிய அமித் ஷா “எங்கள் நோக்கம் மம்தா பானர்ஜி அரசாங்கத்தை தோல்வியுற செய்து பிஜேபி அரசாங்கத்தை அமைப்பது மட்டுமல்ல. வங்காளத்தில் ஒரு சமூக-பொருளாதார மாற்றத்தை கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம். ” என கூறினார்.
மேலும் “நாங்கள் ஆட்சி அமைத்தால் மீனவர்களின் வளர்ச்சிக்காக நாங்கள் நிறைய நலத்திட்டங்களை அறிவிப்போம். 4 லட்சம் மீனவர்களுக்கு 4000 ரூபாய் கொடுப்போம், ” என்றார் அமித் ஷா.
முன்னதாக 11 ஆம் தேதி அன்றும் அமித் ஷா விற்கு கருப்பு கோடி கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.