BJP CAA

பிரபல அஸ்ஸாம் மாநில நடிகர் பாஜக வில் இருந்து விலகல்;வலுக்கும் சிஎபி எதிர்ப்பு!

மத அடிப்படையிலான குடியுரிமை திருத்த மசோதாவை (சிஎபி ) அமித் ஷா தாக்கல் செய்த ஒரு சில நிமிடங்களில் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக பிரபல நடிகர் ரவி ஷர்மா அஸ்ஸாம் மாநில பாரதீய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் தான் பாஜக வில் இணைந்தார். சிஎபி குறித்து பேசிய அவர். “நான் முதலில் ஒரு நடிகன், பிறகு தான் ஒரு அரசியல்வாதி. இன்றைக்கு நான் இந்த நிலைக்கு உயர்வதற்கான காரணம் அஸ்ஸாம் மக்கள் தான். எனவே அஸ்ஸாம் மக்களுக்கு எதிரான இந்த மசோதாவை ஒருபோதும் நான் ஆதரிக்கமாட்டேன். நாம் ஏற்கனவே அதிக அளவில் அகதிகளை உள்வாங்கி கொண்டோம். இந்நிலையில் மேலும் அதிக அளவில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை ஏற்று கொள்ள முடியாது. எனவே இந்த மசோதவை அரசு உடனே வாபஸ் பெற வேண்டும்.அஸ்ஸாம் மாநில மாணவர் முன்னணி நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு அளிப்பேன்” என்று அவர் கூறியுளளார்.”

வடகிழக்கு மாநிலங்கள் முழுவதிலும் பாஜக வின் சிஎபி மசோதாவை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் வலிமை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.