கடந்த சனிக்கிழமை (5-10-19) ஹரியானா மாநிலத்தின் ஆல்வார் பகுதியில் ஒரு முஸ்லிம் தம்பதியினர் இரவு 11.30 மணியளவில் பேருந்திற்காக காத்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு பைக்கில் வந்த 2 நபர்கள் தம்பதியினர் இருவரையும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும் சில தகாத சொற்களை கூறியும் , ஆபாச செய்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.பிறகு இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும் அந்த பெண் முன்னே இருவரில் ஒருவன் ஆடையை அகற்றி ஆணுறுப்பை வெளிப்படுத்தி அசிங்கமாக பேசியுள்ளான் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக கோட்வாலி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற போது தமபத்தினருடன் அவர்களது பிள்ளையும் இருந்துள்ளது. முஸ்லிம் தம்பதியினர் தாக்கப்படுவதை செவியுற்ற அக்கம் பக்கத்தினர் உடனே இதில் தலையிட்டு கேவலமான காரியத்தில் ஈடுபட்ட இருவரையும் சரமாரியாக தாக்கி போலீசாரிடம் பிடித்து கொடுத்துள்ளனர்.அந்த இருவரையும் ஞாயிறு காலை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்கள் வான்ஷ் பரத்வாஜ் (23) மற்றும் சுரேந்திர மோகன் பாட்டியா(32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவத்தின் போது மது போதையில் இருந்ததும் மருத்துவ பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.அக்டோபர் 18 வரை இருவரையும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை போலீசார் சரியான முறையில் செயல்பட்டு தக்கசட்டப்பிரிவுகளின் (I P C 323, 354A,386,295,509) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் , இந்திய டுடே செய்தி வெளியிட்டுள்ளன.