அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM, ஒவைஸி)-ன் உத்தரபிரதேச மாநில பிரிவு செயலாளர் ஹக்கீம் அப்துல் சலாம் கான், புகழ்பெற்ற கியான்வாபி மசூதியில் “சமாஜ்வாதி கட்சியின் முஸ்லீம் எம்.எல்.ஏ.க்களின் மௌனத்தை” விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக உத்தரபிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கீர்தார்பூர் காவல் நிலையத்தில் ஹக்கீமீன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற எந்த ஊடகத்தின் வழியாகவும் வதந்திகளை பரப்புவது, அதன் மூலம் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்திஅச்சுறுத்துவது, குற்றங்களைத் தூண்டுவது ஆகியவற்றுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 505-ன் கீழ் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இந்த சட்டத்தின் கீழ் வதந்திகளை பரப்பியதாக வாரண்ட் இல்லாமலே கைது செய்து காவலில் வைக்க முடியும்.
“ஹக்கீம் அப்துல் சலாம் கானை கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது” என்று கீர்தார்பூர் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (எஸ்எச்ஓ) மனோஜ் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
அந்த பதிவில், சமாஜ்வாதி கட்சியின் 36 முஸ்லிம் எம்.எல்.ஏக்களில் யாரும் கியான்வாபி மசூதி விவகாரத்தில் எவரும் கருத்து கூட தெரிவிக்கவில்லை.. “ஏனெனில் அடிமைகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்க உரிமை இல்லை” என்று கான் இந்தியில் ஒரு பேஸ்புக் பதிவில் கூறி இருந்தார். இது சாதாரண கருத்து சுதந்திரம் என்று நமக்கு தோன்றினாலும் உபி யில் இதற்கும் கூட கைது செய்யப்படுகின்றனர்.