கொரோனாவில் குரோதத்தை காட்டுகிறதா மத்திய அரசாங்கம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அஹமதாபாத்: பெருகி வரும் கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மக்கள் பெரும் அளவு பொருளாத ரீதியாகவும் , உடல் நல ரீதியாகவும் பாதிக்கப்பட்ட இந்நிலையில் ஏய்ம்ஸ் தலைவரை குஜராத்துக்கு அனுப்ப ஆர்டர் போட்டுள்ளார் அமித்ஷா.
நாட்டிலேயே மகாராஷ்டிராதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து குஜராத்தில்தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. குஜராத்தில் இதுவரை 8,194 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை தலைவரை அங்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இது குறித்த தகவலை உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.
அமித்ஷாவின் உத்தரவைத் தொடர்ந்து நேற்று மாலை, இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் குஜராத்திற்கு சென்றுள்ளார் ஏய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர், மருத்துவர் ரந்தீப் குலேரியா. அவருடன் இன்னொரு எய்ம்ஸ் மருத்துவரான மணிஷ் சுரேஜாவும் சென்றுள்ளார்.
குஜராத்தில் இதுவரை 8,194 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 493 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 394 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சோதனை மூலம் கண்டறியப்பட்டது. இதுவரை அம்மாநிலத்தில் 2,545 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
அகமதாபாத்திற்கு சென்ற எய்ம்ஸ் மருத்துவர்கள், எஸ்விபி மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அப்போது எய்ம்ஸ் மருத்துவர்கள், கொரோனா சிகிச்சை குறித்து சில அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எய்ம்ஸ் இயக்குநர், குஜராத்தின் முதன்மைச் செயலாளரை சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார். அவர் குஜராத்தின் முதலவர் விஜய் ருபானியையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத்திற்க்கு மட்டும் எய்ம்ஸ் குழுவை மருத்துவர்களை அனுப்பி உள்ளது மத்திய அரசாங்கம். குஜராத்தை போலவே இன்று தமிழ்நாட்டில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் இதுவரை 7,204 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 47 பேர் உயிர் இழந்துள்ளனர், எனினும் கொரோனாவுக்கு எதிராக களமாட தமிழக அரசு கோரிய நிதியையோ, எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட உதவியோ மோடி அரசு செய்யவில்லை.
அதே போல் கேரளாவிற்க்கும் பாதிப்பு அதிகரித்து முதலில் இடம் வந்து கூட ஆரம்பத்தில் மத்திய அரசாங்கம் எய்ம்ஸ் மூலம் உதவுவதற்க்கு முன் வரவில்லை .
இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டுகிறதா மத்திய அரசாங்கம் என்ற ரீதியில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.