கடந்த 20 வருடமாக கிடப்பில் போடப்பட்டிருந்த யோகி ஆதித்யநாத் மீதான கொலை வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1999ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தலைவர் தலாத் அஜீஸ் என்பவரை கொலை செய்ய அவரை நோக்கி யோகி ஆதித்யநாத் மற்றும் சில குண்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும், இந்த சம்பவத்தின் போது சமாஜ்வாதி கட்சி தலைவரின் பாதுகாப்பு காவல் அதிகாரியாக இருந்த யாதவ் என்பவர் மகாராஜ்கஞ் என்ற பகுதியில் கொலை செய்யப்பட்டார் என்பது தான் அவர் மீது போடப்பட்டிருந்த கொலை வழக்கு.
ஒரு நில பிரச்சனையை தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்றது. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை முஸ்லிம்கள் மயாணமாக பயன்படுத்தி வந்தனர் , இது இந்துக்களுக்கு தான் சொந்தம், இது பூஜை செய்யப்பட்டு வரும் உலர்ந்த குளத்தின் நிலம் என்று என்று ஆதித்யநாத் தரப்பு வாதிட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட தகராறு போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் யாதவின் கொலையில் போய் முடிந்தது
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிபி-சிஐடி விசாரணையின் இறுதி அறிக்கையில் யோகி ஆதித்யநாத்திற்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை CJM கோர்ட் மற்றும் எம்பி எம்எல்ஏக்களுக் கான சிறப்பு நீதிமன்றமும் அங்கீகரித்து இந்த வழக்கை கடந்த செவ்வாய் கிழமையன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.