வெள்ளிக்கிழமை(19-7-19) மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இம்ரான் இஸ்மாயில் என்பவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தி குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்னர்.
ஹோட்டல் ஊழியர் இம்ரான் இஸ்மாயில் படேல் தனது புகாரில் பேகம்புரா பகுதியில் உள்ள ஹட்கோ கார்னர் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது சுமார் பத்து பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார்.
அவர்கள் அவரை கடுமையாக தாக்கி , “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தியதாக இம்ரான் கூறினார்.
இது குறித்து ndtv வெளியிட்டுள்ள வீடியோ …
குண்டர்களின் சப்தத்தை கேட்ட சிலர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரைக் காப்பாற்றியதாக அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுகர் சாவந்த் கூறுகையில், இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஐபிசி பிரிவு 153-ஏ (மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 144 (சட்டவிரோதமாகக் கூடுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.