லக்னோ, ஜூலை 15 (PTI ) மதப் கோஷங்களை எழுப்ப மக்களை கட்டாயப்படுத்தும் ஒரு தவறான நடைமுறை உத்தரபிரதேசம் மற்றும் ஒரு சில மாநிலங்களில் தொடங்கியுள்ளதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று (15-7-19)கண்டனம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
கடந்த சனிக்கிழமை உபி மாநில பள்ளிவாசல் இமாமின் தாடியை பிடித்து இழுத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வற்புறுத்தி தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து முன்னால் உ.பி முதல்வர் மாயாவதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்
“உத்தரபிரதேசம் உட்பட சில மாநிலங்களில், மத கோஷங்களை உச்சரிக்க மக்களை வற்புறுத்துவதும், அட்டூழியங்களைச் செய்வதுமான ஒரு தவறான நடைமுறை தொடங்கியுள்ளது, அது கண்டிக்கப்பட வேண்டும்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
“எல்லா இடங்களிலும் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் பேணப்படுவதற்கும் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் கும்பல் வன்முறைக்கு (lynching ) எதிராக மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. “என்றும் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்