பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில், காணாமல் போன 11 வயது சிறுவன் நூஹ் நகரில் உள்ள மதரஸாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை மதரஸாவில் இருந்து காணாமல் போன சிறுவன், திங்கட்கிழமை பிரார்த்தனை கூடத்தை ஒட்டியுள்ள பழைய அறையில் இருந்து உடல் அழுகிப்போன நிலையில் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சமீர் என அடையாளம் காணப்பட்ட அந்த சிறுவர், ஷா சௌகா கிராமத்தில் உள்ள தர்கா வாலா மதரஸாவில் தங்கியிருந்தது படித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிறுவன் கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர், அடையாளம் தெரியாத குற்றவாளிக்கு எதிராக பினங்காவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
11 வயதான சமீர் கடந்த 2021 முதல் ஷா சவுக்கா கிராமத்தில் உள்ள தர்கா வாலா மதரஸாவில் உருது மற்றும் அரபு மொழிகள் படித்து வந்ததாக டெட் கிராமத்தில் வசிக்கும் அவரது உறவினர் இக்பால் தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று, கிராமவாசிகளில் ஒருவரான ஹாஜி அக்தர் என்பவர் முதலில் சமீரைக் காணவில்லை என்ற செய்தியை குடும்பத்தாருக்கு தெரிவித்துள்ளார்.
“சனிக்கிழமை முதல் நாங்கள் அவரைத் தேடத் தொடங்கினோம், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது மரணம் குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தோம். அவர் பழைய அறையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரது சிதைந்த உடலின் பாதி, மணலால் மூடப்பட்டிருந்தது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன், நீதி வேண்டும்” என்று இக்பால் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
“உடல் அழுகியதால், காயங்கள் எதுவும் தெரியவில்லை. சடலம் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது, செவ்வாய்க்கிழமை பிரேதப் பரிசோதனை மருத்துவர்கள் குழுவினால் நடத்தப்படும் என நுஹ் எஸ்பி வருண் சிங்லா தெரிவித்தார். ”
பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு, எங்களின் மேலதிக விசாரணையில் மரணத்திற்கான காரணம் தெரியவரும்,” என்றார்.