Brahmins Uttarakhand

உத்தராகண்ட் : தனது குடும்பத்தை சேர்ந்த ஐவரை கழுத்தை அறுத்து கொன்ற அர்ச்சகர் கைது!

பாஜக ஆளும் உத்தராகண்ட், டேராடூனின் ராணி போகாரியில் திங்கள்கிழமை காலை கத்தியால் கழுத்தை அறுத்து தனது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரைக் கொடூரமாக கொலை செய்ததற்காக 47 வயதான அர்ச்சகர் ஒருவரை, கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அர்ச்சகரின் தாய், மனைவி மற்றும் மூன்று மகள்களும் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர், உத்தரபிரதேசத்தின் பண்டாவைச் சேர்ந்தவர், மகேஷ் குமார் திவாரி, பிராமண சமூகத்தை சேர்ந்த இவர், டேராடூனில் கடந்த 7-8 ஆண்டுகளாக ராணி போகாரியில் தங்கியிருந்ததாக டேராடூனின் காவல் கண்காணிப்பாளர் (கிராமப்புற) கமலேஷ் உபாத்யாய் தெரிவித்தார்.

இந்த சம்பவம் காலை 7:30 மணியளவில் நடந்துள்ளது, அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் கிடைத்ததும் டேராடூன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திலிருந்து குற்றவாளியை கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவர்கள், தாய் பிடன் தேவி (75), மனைவி நீது தேவி (36), மகள்கள் அபர்ணா (13), அன்னபூர்ணா (9), மற்றும் ஸ்வர்ணா (11) என அடையாளம் காணப்பட்டனர்