கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்திற்குட்பட்ட சக்லேஷ்பூரில் திங்கள்கிழமை, பயங்கரவாத அமைப்பாக விமர்சிக்கப்படும் பஜ்ரங் தள் இயக்கத்தை சேர்ந்தவர்கள், சொந்த மாட்டை கொண்டு சென்று கொண்டிருந்த தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை தாக்கியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பெரும் போராட்டங்கள் வெடித்தன.
ஹலசுலிகே கிராம பஞ்சாயத்தின் முன்னாள் துணைத் தலைவரான மஞ்சுநாத், பஜ்ரங் தள் இயக்கத்தினரால் கொடூரமாக ஆக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றிய தகவல் பரவியதையடுத்து, பல தலித் அமைப்புகள் மாவட்டத்தில் போராட்டம் நடத்தின.
தலித் அமைப்புகள் போராட்டம்:
போராட்டம் வலிமை அடைந்ததை தொடர்ந்து தொடர்ந்து ஒரு வழியாக பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த குரு, ரகு, கிரண், கௌசிக், நவீன், லோகேஷ், சிவு மற்றும் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு பிரிவுகள்:
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 341, 323, 504 மற்றும் 506 மற்றும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மஞ்சுநாத்தின் உறவினர் மீது வழக்கு:
இதற்கிடையில், பஜ்ரங் தள இயக்கத்தை சேர்ந்தவர்களின் புகாரின் அடிப்படையில், பதிக்கப்பட்ட மஞ்சுநாத்தின் உறவினர் காலேஷ் மற்றும் 8 பேர் மீது தாக்குதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.