ஹைதராபாத்: கோஷாமஹால் பாஜக எம்எல்ஏ ராஜா சிங், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை நள்ளிரவிலும், பின்னர் செவ்வாய்கிழமை காலையிலும் நகர காவல் ஆணையர் சிவி ஆனந்த் அலுவலகம் முன்பும் நகரின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன.
நகைச்சுவை என விளக்கம் :
பிரச்னை பெரிதானதும் பாஜக எம்எல்ஏ ராஜா சிங், தனது பேச்சை “நகைச்சுவை” என்று என விளக்கம் அளித்துள்ளார். நகைச்சுவையாளர் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு , அவரையும் ம் அவரது தாயாரையும் மிக கேவலமாக விமர்சனம் செய்தார். அவரது பேச்சை தொடர்ந்து அவரைக் கைது செய்யக் கோரி ஏராளமானோர் தெருக்களில் போராட்டம் நடத்தனர். இவர் மீது டபீர்புரா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். போராட்டம் வெடித்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை போராட்டக்காரர்கள் ஏராளமானோரை போலீஸார் கைது செய்தனர்.
பல்வேறு இடங்களுக்கு பரவும் போராட்டம்:
பாஜக எம்எல்ஏ ராஜா சிங்குக்கு எதிராக போராட்டம் வெடித்ததையடுத்து, ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகம், லக்டிகாபூலில் உள்ள போலீஸ் டைரக்டர் ஜெனரல் அலுவலகம், பூரணி ஹவேலியில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜா சிங் 10 நிமிடம் 27 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவின் முடிவில், தரக்குறைவான கருத்துக்களைத் தெரிவித்த ராஜா சிங், தான் பேசியதெல்லாம் “காமெடி” என்றும், அவர் கூறியது தனக்கேப் பிடிக்கவில்லை என்றும் கூறினார்.
தெலுங்கானா மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் போலீசார்:
இதற்கிடையில், ராஜா சிங் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில், மங்கல்ஹாட் மற்றும் தூல்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர். தெலுங்கானா மாநில சிறப்பு போலீஸ், கிரேஹவுண்ட்ஸ் மற்றும் அண்டை மாவட்டங்களின் ரிசர்வ் பிரிவுகளில் இருந்து விரைவு அதிரடி படை மற்றும் போலீஸ் படையும் நிறுத்தப்பட்டுள்ளன. ஹைதராபாத் மற்றும் பழைய நகரத்தின் வகுப்புவாத உணர்வுப் பகுதிகளிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜா சிங்கின் பாதுகாப்பையும் மதிப்பாய்வு செய்து வருவதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சருக்கு சவால்:
முனாவர் ஃபரூக்கியை ஹைதராபாத்தில் (கடந்த ஆண்டு) நிகழ்ச்சிக்கு அழைத்த டிஆர்எஸ் செயல் தலைவரும் தெலுங்கானா ஐடி அமைச்சருமான கே.டி.ராமராவ் மீதும் பாஜக எம்.எல்.ஏ. “உனக்கு தைரியம் இருந்திருந்தால் என்னை போக விட்டிருக்க வேண்டும். நான் உனக்குக் காட்டியிருப்பேன். ராஜா சிங் கொல்லப்படுவது குறித்து பயப்படுவதில்லை, நான் இறக்கவும் பயப்படுவதில்லை, ”என்று ராஜா சிங் தனது புதிய வீடியோவில் கூறினார்.