ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையாக பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவின் மக்கள்தொகை சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையாக அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுவது இது முதல்முறை அல்ல.
ரஷ்யாவில் இதற்கு முன்னர் 1940களிலும் மக்கள்தொகை பெருக்கத்தை உண்டு பண்ண இந்தத் திட்டம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.