Islamophobia Muslims Uttar Pradesh

உபி : “பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவேன் ” என முஸ்லிம் வியாபாரியை மிரட்டிய எஸ்.ஐ !

கான்பூர்,உத்தரப்பிரதேசம், ஆகஸ்ட் 4 (ஐஏஎன்எஸ்): ‘பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவேன்’ என்று ஒரு முஸ்லிம் விடுவேன் வியாபாரியை போலீஸ் அதிகாரி மிரட்டும் ஆடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உ.பி. போலீஸ்காரர் ஒருவருக்கும் முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கும் இடையிலான உரையாடல் ஆடியோ கிளிப்பில் சப்-இன்ஸ்பெக்டர் அந்த நபரிடம் தனது பெயரைக் கேட்டு முஸ்லிம் என்பதை அறிந்து கொண்ட உடன் “உன்னை பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவேன்” என கூறுவதைக் கேட்க முடிகிறது.

பணத்தை உரிய தவணையில் செலுத்த வில்லை என்ற புகார் தொடர்பாக முஸ்லிம் வியாபாரியை தொலைபேசி வழியாக சசெந்தி காவல் நிலையத்தின் மண்டி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திர நரேன்அழைத்ததாகக் கூறப்படுகிறது.

https://twitter.com/Satyamooknayak/status/1555078505104576512

நரேன் அந்த முஸ்லிம் வியாபாரியை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார், இரண்டு மணி நேரம் கழித்து வருவதாகக் வியாபாரி கூறியுள்ளார்.

பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நரேன், அந்த நபரிடம் உன் பெயர் என்ன என கேட்டுள்ளார்.

அந்த நபர் தன்னை ஆஷிப் என்று அறிமுகப்படுத்திக் கொண்தும், சப்-இன்ஸ்பெக்டர் “உன்னை பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவேன்” என மிரட்டுவது ஆடியோவில் பதிவாகியுள்ளது.

கான்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) ஆதித்ய குமார் சுக்லா கூறுகையில், “கான்பூர் வெளிப்புறப் பகுதியில் உள்ள சசெந்தி காவல் நிலையத்தின் கீழ், மண்டி அவுட்போஸ்ட் இன்சார்ஜ் தொடர்பான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.