துருக்கியில் இருந்து கேட்விக் செல்லும் தாமஸ் குக் விமானத்தில் இருந்து இரண்டு பெண்கள் வெளியேற்றப்பட்டனர். அவ்விருவரும் வெள்ளை நிற நீள ஆடையுடன் இருந்த மூன்று முஸ்லீம் ஆண்கள் “பயங்கரவாதிகள்” என்றும் விமானத்தின் பாதுகாப்பிற்கு “அச்சுறுத்தல்” என்றும் கூச்சலிட்டதாக மற்ற பயணிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் டால்மானில் இருந்து கேட்விக் செல்லும் விமானம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது.
சம்பவ வீடியோவை காண
விமானத்தில் இருந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மரியோ வான் பாப்பல் என்ற பயணி , அந்த பெண் ஒரு “இனவெறி பிடித்த பைத்தியம்” என்று கூறினார்.
விமானத்தில் இருந்த ஷானியா கெர்ரி என்ற பயணி , முஸ்லிம் ஆண்களை விமானத்திலிருந்து இறக்கிவிட அப்பெண்கள் முயற்சித்ததாக கூறினார். “அவர்கள் விமானத்தின் முன்புறம் சென்று, விமான பணிப்பெண்களுடன் பேசினர் . அவர்களை குறித்து ” அருவருப்பானவர்கள் “மற்றும்” அச்சுறுத்தல் “என்று கூறி வெளியேற்ற முயற்சித்தனர்.” மேலும் இம் மூவருடன் பயணிப்பதால் மற்ற பயணிகளை நோக்கி முட்டாள்கள் என்று ஏசினார்.
சக பயணியான திருமதி கெர்ரி அவர்கள் “அருவருப்பான நடத்தை” காரணமாக அவர்களை எதிர்கொண்டபோது அந்த பெண் அவரை கடும் வார்த்தைகளில் திட்டியுள்ளார்.
தாமஸ் குக் விமான குழுமம் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் ,
“எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முதல் முன்னுரிமையாகும், எங்கள் விமானத்தில் இந்த வகையான நடத்தையை நாங்கள்ஒரு போதும் ஏற்கமாட்டோம். எங்கள் வாடிக்கையாளர்களின் விமானத்தின் தாமதத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். ” என்று தெரிவித்துள்ளனர்.