8, 320 கட்டிட உள்ளீடுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வில் குஜராத்தில் கிட்டத்தட்ட 35% கட்டமைப்புகள் கட்டிட-பயன்பாட்டு (BU) அனுமதிகள் இல்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜனவரியில் தொடங்கிய இந்த கணக்கெடுப்பு மாநகராட்சிகள் மற்றும் நகரபாலிகாக்கள் (நகராட்சிகள்) முழுவதிலும் நடத்தப்பட்டது.
குஜராத்தின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூன்று மாதக் கணக்கெடுப்பின் முடிவில், மாநிலத்தில் கிட்டத்தட்ட 35% கட்டிடக் கட்டமைப்புகள் சட்டத்திற்குப் புறம்பானது, ஏனெனில் அவை கட்டிட பயன்பாட்டு (BU) அனுமதிகள் இல்லாதவை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின் மாதிரி அளவு 8,320 கட்டிடங்கள், குடியிருப்பு, வணிக, உயர்மட்ட கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற சிறப்பு வகை கட்டிடங்கள் – முனிசிபல் கார்ப்பரேஷன்கள் மற்றும் நகர்பாலிகாக்களை (நகராட்சிகளை) உள்ளடக்கியதாகும்.
கூடுதல் தளங்களைக் எழுப்புதல், கட்டிடங்களின் பயன்பாட்டில் மாற்றம், அதிகார வரம்புச் சிக்கல்கள் போன்றவை கட்டிடங்களுக்கு கட்டிட பயன்பாட்டு அனுமதி இல்லாததற்குப் பின்னால் உள்ள ஒரு சில காரணங்கள். அத்தகைய கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டால், அதன் விளைவாக பரவலான கட்டிட இடிப்புகள் ஏற்பட வழிவகுத்து விடும். குஜராத்தி சொத்து உரிமையாளர்கள் இந்த சட்ட சிக்கலை சமாளிக்க சில “நிபந்தனைகள்” கொண்ட அரசாணையை கொண்டு வர வேண்டும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை, குஜராத் மாநில அரசுக்கு தனது பரிந்துரையை அளித்துள்ளது.
துறைரீதியான எந்த ஒரு அதிகாரபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் முன்பு, இவ்விவகாரத்தில் பரிந்துரை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும், எங்களின் இலக்கு சேதத்தை முடிந்த வரை குறைப்பதுவே ( மினிமம் டேமேஜ்) என டைம்ஸ் ஆஃப் இந்தியா உடனான உரையாடலில் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சில முக்கிய காரணிகள்:
கணக்கெடுப்பு ஜனவரி 2022 இல் தொடங்கியது. அகமதாபாத்தில் 1,050 கட்டிடங்கள், சூரத்தில் 1,000, ராஜ்கோட்டில் 750 மற்றும் வதோதராவில் 800 கட்டிடங்கள் BU அனுமதிக்காக ஆய்வு செய்யப்பட்டன. ஒரு சொத்து அமைந்துள்ள மண்டலம், சொத்தின் முன் உள்ள சாலையின் அகலம், அந்த நிலம் தனியாருக்கு சொந்தமானதா அல்லது அரசால் ஒதுக்கப்பட்டதா, மற்றும் தீ பாதுகாப்பு இணக்கத்தின் நிலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்ட சில முக்கிய காரணிகள். . கட்டடத்தின் பயன்பாட்டில் மாற்றம் உள்ளதா, சுகாதாரக் கேடு விளைவிக்கக் கூடிய கட்டடமா, குடிமைப் பயன்பாடுகளின் நிலை போன்ற காரணிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
கட்டிடங்கள் ஆய்வு:
அகமதாபாத்தில், கணக்கெடுக்கப்பட்ட 1,050 கட்டிடங்களில் 32% BU அனுமதி பெறவில்லை. நகர்பாலிகா (நகராட்சி) எல்லைக்குள் 2,160 கட்டிடங்களும், எட்டு மாநகராட்சிகளுக்குள் 5,600 கட்டிடங்களும், நகர்ப்புற வளர்ச்சி அதிகார வரம்புகளின் கீழ் சுமார் 560 கட்டிடங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
“அஹமதாபாத்தில் உள்ள AUDA (அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்), அங்கீகரிக்கப்படாத மேம்பாட்டுக் கட்டணத்தை’ வசூலித்தும், கட்டிட பயன்பாட்டு அனுமதி வழங்கப்படாத உதாரணங்களும் ஏராளம் உள்ளன. இந்தக் கட்டிடங்களில் பல இப்போது கூடுதல் தளங்களைக் கொண்டுள்ளன, அவற்றிற்கு கட்டிட பயன்பாட்டு அனுமதி இல்லை,” என்று மூத்த AMC அதிகாரி ஒருவர் கூறினார். மத்திய சட்டமான மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 2010 இன் விதிகளை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை அப்படியே கொஞ்சம் உபியில் சட்ட விரோதமாக முஸ்லிம்களின் வீடுகளை இடிக்கப்படுவதோடு ஒப்பிட்டு பாருங்கள்!