ஹரியானா: ஞாயிற்றுக்கிழமை ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள பஹ்ராவார் கிராமத்தில் கோடாரிகளை ஏந்தியபடி பிராமணர்கள் ஒன்று கூடினர். அப்போது கோவில், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றை கட்டும் வகையில், 16 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு மீண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “பிராமணர்களின் ஐகானாக” கருதப்படும் பரசுராமின் ஆயுதமான கோடாரியுடன், பிராமண சமூகம் இந்த அளவில் பொது பலத்தை வெளிப்படுத்துவது இதுவே முதல் முறை என்று கூறினார்.
பாஜக முதல்வரை மட்டம் தட்டிய பிராமண பாஜக எம்பி :
பிராமணர்கள் அதிகம் வசிக்கும் கிராமமான பஹ்ராவாரில் நடந்த நிகழ்ச்சியில், 2019 மக்களவைத் தேர்தலில் ரோஹ்தக்கில் இருந்து காங்கிரஸின் தீபேந்தர் சிங் ஹூடாவை தோற்கடித்த பாஜக எம்பி அரவிந்த் சர்மா கலந்து கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் மனோகர் லால் கட்டாரை தாக்கி பேசிய அவர், பாஜக முதல்வரை, “அறிவை உபயோகித்து ஒரு வேலையும் செய்வதில்லை” என்று கூறினார். 56 ஆண்டுகளுக்கு முன்பு பண்டிட் பகவத் தயாள் சர்மாவுக்குப் பிறகு மாநிலத்தில் பிராமண முதல்வர் இல்லை என்றும் அவர் கூறினார்.
பிராமணர்கள் இரண்டாவது பெரிய சமூகம்:
பாஜக ராஜ்யசபா எம்பி லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு பெற்றவர்) டிபி வாட்ஸ் கூறுகையில், ஹரியானாவில் ஜாட்களுக்கு அடுத்தபடியாக பிராமணர்கள் இரண்டாவது பெரிய சமூகமாக உள்ளனர். சமூகத்தில் அதிகாரத்தில் அதிக பங்கு இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருவதாக தெரிகிறது. தற்போது, கட்டார் அரசாங்கத்தில் உள்ள ஒரே பிராமண கேபினட் அமைச்சராக மூல் சந்த் சர்மா மட்டுமே உள்ளார். ஷர்மாவைத் தவிர, சோனிபட் எம்பி ரமேஷ் கௌஷிக் மட்டுமே ஹரியானாவிலிருந்து மக்களவையில் உள்ள ஒரே பிராமண எம்பி ஆவார், அதே போல ராஜ்யசபாவில் வாட்ஸ் மட்டுமே ஒற்றை ஹரியானாவை சேர்ந்த பிராமண பாஜக எம்பி.
பிராமண முதல்வர் வேண்டும்:
ஜாட் மற்றும் ஜாட் அல்லாதவர்களின் காரணியைச் சுற்றி வழக்கமாக ஜாதி அரசியல் சுழன்று கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தில் பிராமண முதல்வர் பதவியில் அமர்த்தப்பட சர்மா களமிறங்குவதால், பாஜக நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இவ்விவகாரத்தில் மாநில பாஜக அரசாங்கம் தேவையற்ற அவசரத்தை காட்ட விரும்பவில்ல, அழுத்தத்திற்கு உள்ளாகிறது என்ற தோற்றத்தைத் தவிர்க்க முயல்கிறது. கோதி மீடியாக்களும் இதை பற்றி செய்தி ஆக்குவதில்லை.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் நவீன் ஜெய்ஹிந்த் ஏற்பாடு செய்திருந்தார், அவர் பிராமணர்களை நிகழ்ச்சிக்கு செங்கல் மற்றும் கோடரியைக் கொண்டு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். 2009 இல், பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், சர்ச்சைக்குரிய நிலத்தை கவுர் பிராமண அமைப்புக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான கிராம பஞ்சாயத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பிஜேபி ஆட்சிக்கு வந்ததும், பஹ்ராவார் ரோஹ்தக் முனிசிபல் கார்ப்பரேஷனின் ஒரு பகுதியாக மாறியது. சில விதிமுறைகள் நிறைவேற்றப்படாததால், அதிகாரிகள் குத்தகையை ரத்து செய்தனர் என்பது போராட்டக்காரர்களின் கூற்று.
ஒரு பைசா கூட கொடுக்க மாட்டோம்:
“பிராமணர் சமூகத்தை அலைக்கழிக்கின்றனர், ஆனால் அரசாங்கம் அவர்களுக்கு நிலத்தை மட்டும் ஒப்படைக்கவில்லை” என்று ஜெய்ஹிந்த் கூறினார். “இப்போது, பிராமணர்களிடம் ரூ.8 கோடி (வளர்ச்சிக் கட்டணமாக) கேட்கப்படுகிறது. நாங்கள் அரசுக்கு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டோம்.
சில நாட்களுக்கு முன்பு,நவீன் ஜெய்ஹிந்த், அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த குடிமை அமைப்பின் பலகையை அகற்றி, சமூகத்திற்காக நிலத்தை உரிமை கோரினார். இந்த விவகாரம் சரியாக கையாளப்படவில்லை என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டார்.
நிலத்தை வழங்கி விடுவோம் – பாஜக:
நில குத்தகையை அரசாங்கம் ஏன் மீட்டெடுக்கவில்லை என்ற கேள்விக்கு, பாஜகவின் மூத்த நிர்வாகி ஒருவர், “முறையான செயல்முறைக்கு பிறகு, நிச்சயமாக நிலம் பிராமண சமூகத்திற்கு வழங்கப்படும்” என்றார்.
பிராமணர்களுக்கு நிலத்தை திருப்பிக் கொடுப்பதில் தாமதம் செய்யக்கூடாது என்றும் வாட்ஸ் கூறினார்.
நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ்