Corona Virus Indian Economy

டில்லி: லாக்டவுன் உள்ள நிலையிலும் புதிய பாராளுமன்றத்திற்கான கட்டுமான பணிகள் தொடரும் ..

தில்லி அரசாங்கம் திங்களன்று அறிவித்த லாக்டவுன் மத்தியிலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடரும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதுள்ள பாராளுமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள இந்த கட்டிடம் நவம்பர் 2022 க்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை லாக்டவுனின் போது தில்லி அரசு கட்டுமான பணிகளை தடை செய்திருந்தாலும், தொழிலாளர்கள் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலேயே தங்கி இருந்தால் கட்டுமான பணியை தொடரலாம் என்று தெரிவித்திருந்தது.

இந்த கட்டுமான பணிகள் முடிந்தவரை தொடரும் என்று மத்திய பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, தொழிலாளர்கள் சராய் காலே கானில் அமைக்கப்பட்ட ஒரு முகாமில் தங்கியிருந்தனர். மெட்ரோ மற்றும் பேருந்துகள் மூலம் லுடீயன்ஸ் டெல்லியில் உள்ள இடத்திற்கு பயணம் செய்தனர்.

புதிய நாடாளுமன்றத்தை நிர்மாணிக்கும் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் செய்தித் தொடர்பாளர் நரேஷ் சர்மா கூறுகையில்: “பணிகள் தொடர்கின்றன. அனைத்து தொழிலாளர்களும் சைட்டிலேயே தங்கியிருக்கிறார்கள், கட்டுமான பணிக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. ” என்றார்.

சென்ட்ரல் விஸ்டாவின் பெரிய மறுவடிவமைப்பின் முதல் பகுதியாக இப்பணி ஜனவரி மாதம் தொடங்கியது, இது ராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரை நீண்டுள்ளது. பாராளுமன்றக் கட்டடத்தைத் தவிர, மத்திய விஸ்டா அவென்யூவை புதுப்பிக்கும் திட்டம் நடைபெற்று வரும் அதே நேரத்தில் புதிய செயலக கட்டிடங்களின் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.