பாரதீய ஜனதா கட்சி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், 2014 முதல் கூர்க்கா சமூகத்துக்காக எதுவும் செய்யவில்லை என்றும் கோர்கலான்ட் ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) தலைவர் பிமல் குருங் சனிக்கிழமை குற்றம் சாட்டினார். மேலும் வங்காளத்தில் பிஜேபிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும், எனவே மாநிலத்தில் பாஜக அரசாங்கம் அமைய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
தற்போது நடைபெற்று வரும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வாய்ப்புகள் குறித்து கேட்க பட்டபோது, “அவர்களுக்கு (பாஜக) வங்காளத்தில் மக்கள் ஆதரவு இல்லை. மக்கள் மன்றத்தில் அவர்களுக்கு அதிக செல்வாக்கு இல்லை” என்றார் பிமல் குருங்.
“அவர்கள் எப்படி அரசாங்கத்தை அமைக்க முடியும்? வன்முறை, காழ்ப்புணர்ச்சி, துப்பாக்கிச் சூடு மூலம் அரசியல் சாத்தியமில்லை. அரசியல் எளிமையாக இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
“நான் கடந்த 15 ஆண்டுகளாக பாஜகவை ஆதரித்தேன், ஆனால் பாஜக எனது சமூகத்திற்கு இதுவரை என்ன செய்தது? மோடி எங்களுக்கு உறுதியளித்து வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என கூறினார், எனினும் 6.5-7 வருடங்கள் ஓடி விட்டன, இன்னும் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை” என்று பிமல் குருங் கூறினார்.