சூரத்: கோவிட் -19 நோயாளிகளைக் கொண்டுவரும் ஆம்புலன்ஸின் இடைவிடாத சைரன்களுக்கு இடையே, தெற்கு குஜராத்தின் மிகப்பெரிய கோவிட் -19 மருத்துவமனையான அரசு நடத்தும் புதிய சிவில் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை ஆரிய சமாஜ் உறுப்பினர்கள் கொரோனா வைரஸை ‘ஒழிக்க’ ஒலிபெருக்கியின் மூலம் யாகம் நடத்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் யாகத்தை நடத்த உயர் என்.சி.எச் நிர்வாகத்தால் அழைக்கப்பட்டதாக ஆர்யா சமாஜ் உறுப்பினர்கள் கூறினார்.
முந்தைய நாளில் ராம்நாத் கெலா மற்றும் குருக்ஷேத்ரா தகனங்களில் யாகங்களை நடத்தினோம், அதே யாகம் இன்று அஸ்வினிகுமார் தகன கூடத்தில் செய்யப்படும். இந்த சடங்கை இன்று கோவிட் மருத்துவமனைக்கு அருகே நடத்த என்.சி.எச் டீன் என்னை அழைத்தார், ”என்று பட்டார் ஆரிய சமாஜின் தலைவர் உமாஷங்கர் ஆர்யா தெரிவித்தார்.
தற்போது, கோவிட் -19 நோயாளிகளுக்கு என்.சி.எச் இல் 1,500 படுக்கைகள் உள்ளன, அவற்றில் 1,300 படுக்கைகள் ஃபுல் ஆகியுள்ளது.. கோவிட் -19 மருத்துவமனை, சிறுநீரக மருத்துவமனை மற்றும் அதன் பழைய கட்டிடம் என அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் நோயாளிள் என்.சி.எச். இல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.