உபி: உபியில் உள்ள கிராமம் ஒன்றில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில் கண்ட உள்ளூர் தலித் மக்கள், செவ்வாய்க்கிழமை (30-3-21) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குந்தா கிராமத்தில் உள்ள அம்பேத்கார் சிலை திங்கள்கிழமை அதிகாலையில் சில “சமூக விரோத சக்திகளால்” சேதம் செய்யப்பட்டதாக பில்தாரா சாலையில் உள்ள சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் (எஸ்.டி.எம்), சர்வேஷ் யாதவ் தெரிவித்தார்.
எஸ்.டி.எம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர், விரைவில் ஒரு புதிய சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் மீது பீம்புரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அம்பேத்கர் கமிட்டி தலைவர் சுனில் குமார் அளித்த புகாரின் பேரில், இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் யாதவ் தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் மாவட்டத்தின் சிக்கந்தர்பூர் பகுதியில் அம்பேத்கரின் சிலை ஒன்று இவ்வாறே சேதம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.