பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ளார்.
தலைநகர் தாக்காவில் பேசிய மோடி தான் பங்களாதேஷின் சுதந்திரத்துக்காக பாடுபட்டதாகவும், அதற்காக சிறை சென்றதாகவும் கூறினார்.
“பங்களாதேஷின் சுதந்திரப் போராட்டம் எனது வாழ்க்கை பயணத்திலும் ஒரு முக்கியமான தருணமாகும் … நானும் எனது சகாக்களும் இந்தியாவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டோம் … அப்போது நான் எனது இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தேன். பங்களாதேஷின் சுதந்திரத்துக்காக சத்தியாக்கிரக போராட்டம் நடத்தி நான் சிறையிலும் அடைக்கப்படும் வாய்ப்பை அப்போது பெற்றேன்” என கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இதனை தொடர்நது இந்திய அளவில் #Lielikemodi (மோடியை போல பொய் சொல்லுங்க பாப்போம்) என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆனது.இந்நிலையில் தற்போது சாரல் படேல் என்பவர் பிரதமரின் மேற்குறிப்பிட்ட பேச்சு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மோடி எந்த ஐ.பி.சி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார், எந்த சிறையில் அடைக்கப்பட்டார் என கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரதமர் மோடி பங்களாதேஷின் சுதந்திரத்துக்காக சத்தியாக்கிரக போராட்டம் நடத்தி கைது செய்யபட்டதாக கூறுகிறார், எனவே..
- அவர் எந்த தேதியில் கைது செய்யப்பட்டார்.
- எந்த இந்திய சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கான முதல் தகவல் அறிக்கை இருப்பின் வழங்கவும்.
- இந்தியாவில் உள்ள எந்த சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்?
- இது தொடர்பாக உள்ள அனைத்து ஆவணங்களையும் வழங்கவும்.
இவ்வாறு அவர் கேள்விகளை எழுப்பி உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன பதில் வருகிறது என்று ! என்கிறார் சாரல்.