BJP Crimes Against Women Uttar Pradesh

பாலியல் வழக்கில் முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் குற்றமற்றவர் என சிறப்பு நீதிமன்றம் விடுவிப்பு !

உபி: சட்ட கல்லூரி மாணவி தாக்கல் செய்த கற்பழிப்பு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில், முன்னாள் பாரதீய ஜனதா தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தை மார்ச் 26 தேதி, வெள்ளிக்கிழமையன்று குற்றமற்றவர் என சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்த் கட்டுப்பாட்டில் இயங்கும் எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் மாணவியாக இருந்த அவர்,கடந்த 2019 ஆகஸ்டில் சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்.

மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு !

“புனித சமூகத்தின் மூத்த தலைவர்” ஒருவர் தன்னை துன்புறுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டி கடந்த 2019 ஆகஸ்டில் மாணவி ஒரு வீடியோவை வெளியிட்ட பிறகு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

அடுத்த ஒருநாளில், அந்த மாணவி காணாமல் போனார். அவரது தந்தை சின்மயானந்த் மீது புகார் அளித்தார், அதனை தொடர்ந்து சுவாமி சின்மயானந்த் 2019 செப்டம்பர் 20 அன்று கைது செய்யப்பட்டார்.

பின்னர், முன்னாள் பாஜக தலைவரிடமிருந்து பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டில் மாணவி கைது செய்யப்பட்டார்.

சின்மயானந்த் மீது ஐபிசியின் 342, 354-டி , 506 (கிரிமினல் மிரட்டல்) மற்றும் பிரிவு 376-சி (அதிகாரம் உள்ள ஒருவர் பதவியைத் துஷ்பிரயோகம் செய்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது.

பிப்ரவரி 3, 2020 அன்று, சின்மாயந்த் அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை ஷாஜகான்பூரிலிருந்து லக்னோவின் சிறப்பு எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் மாற்றியது.

அக்டோபர் 2020 இல், லக்னோவில் உள்ள ஒரு சிறப்பு எம்.பி.-எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் முன்னர் தான் சுமத்திய குற்றச்சாட்டுக்கு மாற்றமாக சட்ட கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்தார். மேலும் முன்னாள் பாஜக அமைச்சரான சுவாமி சின்மயானந்த் தனக்கு பாலியல் பலாத்காரம்/தொல்லை கொடுக்கவில்லை என்று கூறினார். இதனால் நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என விடுவித்தது.