காஜியாபாத்தின் தஸ்னா கோவிலில் ஒரு சிறு முஸ்லீம் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற ஒரு சில நாட்களில் இதுபோன்ற மற்றொரு சம்பவம் உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில், 18 வயது சிறுவன் முஸ்லீம் இளைஞர் ஒருவர் எட்டாவாவில் உள்ள ஒரு கோவிலில் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
எட்டாவா மாவட்டத்தின் கோட்வாலி பகுதியில் உள்ள பிதாம்பர மாதா கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் ஷைலேந்திர சிங் வர்மா (44), அகில் வர்மா (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு ஆளான தானிஷ் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிகிறார்.கட்டுமானப் பொருட்களை கோயிலுக்கு எடுத்துச் செல்லும் பணியை செய்து வந்துள்ளார்.
“சில கட்டுமானப் பொருட்களை கோவில் வளாகத்தில் இறக்கிவிட சென்றேன். முதலில், அவர்கள் நல்ல முறையில் பேசினார்கள், அவர்கள் உழைப்புக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள். ரூ .460 செலுத்தச் சொன்னேன். அப்போது ஒருவர் என்னை உள்ளே வந்து பணத்தை வங்கி கொள்ளச் சொன்னார். உள்ளே நுழைந்த பிறகு, அவர்கள் என் பெயரைக் கேட்டார்கள். நான் அவர்களிடம் என் பெயர் டேனிஷ் என்று சொன்னேன், நான் ஒரு முஸ்லீம் தானா என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள். ஆம் என்றேன். பின்னர் அவர்கள் என்னை இரும்பு கம்பிகள் மற்றும் குழாய்களால் அடிக்கத் தொடங்கினர்.” என்கிறார் தானிஷ்.
பாதிக்கப்பட்டவர் இவ்வாறு கூறினாலும், தாக்குதலுக்கு காரணம் கூலி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை என உபி போலீசார் கூறுகின்றனர்.