மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை “பொய்யர்” என்று கூறினார். மேலும் பாஜக மாநிலத்திற்குள் குண்டர்களை அழைத்து வருவதாக குற்றம் சாட்டினார். கடந்த புதன்கிழமை அன்று இவ்வாறு மம்தா பேசி உள்ளார்.
பிஷ்ணுபூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “நான் பிரதமர் பதவிக்குரியவரை மிகவும் மதித்து வந்தேன், மதிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாமல் இல்லை ஆனால் பிரதமர் மோடியைப் போன்ற ஒரு பொய்யரை நான் பார்த்ததில்லை. அவர் பொய்களை மட்டுமே பேசுகிறார். இங்கு குண்டர்கள் யார்? இன்று, பாஜக சித்திரவதை காரணமாக, உ.பி.யில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் வேலையை விட்டு வெளியேறுகிறார்கள். ” என கூறினார் மம்தா.
வங்காள கலாச்சாரத்தை அழிக்க பாஜக உத்தரபிரதேசத்திலிருந்து குண்டர்களை அழைத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக விவசாயிகள் சாலைகளில் இருப்பதாகவும், அவர்கள் சாலைகளில் நடக்க முடியாமல் போவதை மத்திய அரசு உறுதி செய்வதாகவும் மம்தா கூறினார்.
“இதற்கு பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் அதானி ஆகிய மூன்று சிண்டிகேட்களின்ளே காரணமாகும். அதானி அனைத்து பணத்தையும் தயாரிப்புகளையும் கொள்ளையடிப்பார், மோடி, அமித் ஷா மற்றும் அதானி மட்டுமே சாப்பிடுவார்கள், மீதமுள்ள மக்கள் கண்ணீர் வடிக்க மட்டுமே முடியும்” என்று அவர் கூறினார்.
“அவர் (பிரதமர் மோடி) அனைவருக்கும் ரூ .15 லட்சம் வழங்குவதாக உறுதியளித்தார். அவர் கொடுத்தாரா? ரூ 15 லட்சம் தரவுமில்லை, எனவே பாஜகவுக்கு ஓட்டுமில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
“அவர்கள் பேடி படாவ் பேட்டி பச்சாவ்” (பெண்களை படிக்க வையுங்கள், காப்பாற்றுங்கள்) என்று சொன்னார்கள், ஆனால் அவர்கள்இதற்கு ஒரு ரூபாயை கூட செலவிடவில்லை. ஆயினும் எங்கள் அரசு சிறுமிகளுக்கு 1000-2500 ரூபாய் உதவித்தொகையை வழங்குகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.