பிரெஞ்சு வேளாண்மை மற்றும் உணவு அமைச்சகத்தின் சுற்றறிக்கையின்படி, ஹலால் இறைச்சிகான தடை 2021 ஜூலை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் மசூதி இயக்குனர் செம்செடின் ஹபீஸ் , லியோன் மசூதி கமல் கப்டேன் மற்றும் எவ்ரி மசூதி இயக்குனர் கலீல் மாரூன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் பிரெஞ்சு அரசாங்கத்தின் “தீவிர அல்ட்ரா செக்குலர்” அணுகுமுறையை விமர்சித்ததோடு, “வேளாண்மை மற்றும் உணவு அமைச்சகத்தின் இச்சுற்றறிக்கை நாட்டின் மிக பெரும் முஸ்லீம் சமூகத்திற்கு எதிர்மறையான செய்தியை அனுப்புகிறது ” என தெரிவித்துள்ளனர்.
ஜூலை மாதம் நடைமுறைக்கு வரவுள்ள இச்சட்டம் , ஹலால் முறையில் கோழியை அறுக்க முடியாத நிலைக்கு தள்ளுவதாக முஸ்லிம் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்றுவதைத் தடுக்கும் ஒரு கடுமையான தடையாக சுற்றறிக்கை உள்ளதாகவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், பிரெஞ்சு விவசாய அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் மத சடங்குகளை மதிக்க சில விதிவிலக்குகள் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மார்ச் 15 ம் தேதி மூன்று மசூதி நிர்வாகிகள் சிந்தித்து தங்களது ஆதங்கத்தை சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு தெரிவித்தனர் என்று கூட்டு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் தலைவர்கள் யூத சமூகத்தின் தலைவர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்து வருகின்றனர்.