கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பிற்காக வேத வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பாஜக வின் மத்திய பிரதேச கலாச்சார அமைச்சர் உஷா தாக்கூர், கடந்த மார்ச் 7 அன்று வலியுறுத்தி பேசினார். மாட்டு சாணதின் ‘ஹவானை’ (மாட்டு சாணத்தை யாகத்தில் எரிக்கும் போது வெளிப்படும் புகை) கொண்டு ஒரு வீட்டை 12 மணி நேரம் வரை சுத்திகரிப்புடன் வைக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தூர் பிரஸ் கிளப் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு பேசினார்.
“கோவிட் -19 க்கு எதிரான நம் போராட்டத்தில், அலோபதியுடன் சேர்ந்து வேத வாழ்க்கை முறையையும் கையாள்வது மிகவும் அவசியமாகும். வேத வாழ்க்கை முறைக்கு நாம் திரும்ப வேண்டும் என்ற செய்தியை கொரோனா நோய்த்தொற்று நமக்கு உணர்த்துகிறது.
“மாட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய்யுடன், அரிசியை கலக்கவும். பிறகு அந்த கலவையை சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரத்தில், வறட்டியின் (காயவைக்கப்பட்ட மாட்டு சாணம்) மீது போட்டு, யாகம் வளர்த்தால் உங்களின் வீடு 12 மணி நேரம் சுத்தமாக (சேணிடைஸ்டாக) இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
தனது ‘இந்த அறிவுரை மக்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் வீடுகளை சுத்திகரிப்பாக வைப்பதற்கு நான் சொன்ன இந்த குறிப்பு கற்பனையானது அல்ல.’
“இது அறிவியல் …,” என்று அவர் கூறி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.