தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது தே.மு.தி.க.
இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில். “அதிமுக உடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் தே.மு.தி.க. கேட்டுக்கொண்டதற்கு இணங்க தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. எனவே தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒருமித்த முடிவாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்துள்ளோம்.” என கூறப்பட்டுள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டி அளித்துள்ளார்
எனினும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இதுவரை முடிவு எடுக்கப்பட வில்லை என தெரிகிறது.
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுகிறது. இந்த முடிவு அதிமுக கூட்டணிக்கு சாதகமா? பாதகமா? உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்