மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள முர்பாத்தைச் சேர்ந்த பாஜக கூட்டுரிமை குழு உறுப்பினர் (கார்ப்பரேட்டர்) நிதின் தெல்வானே, பெண் உறுப்பினர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமையால் கைது செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வியாழக்கிழமை தெரிவித்தார்.
நள்ளிரவு 12.40 மணியளவில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதற்காக பாஜக தலைவர் டெல்வானே கைது செய்யப்பட்டார்.
“ஐபிசி பிரிவு 452 (வீட்டு மீறல்), 354 (துன்புறுத்தல்), 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அனில் தேஷ்முக் கூறினார்.
இதே போல கடந்த பிப்ரவரி மாதம், பாஜகவின் அலுவலக பொறுப்பாளர் ஒருவர் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் என்றும், போலி ஆவணங்களுடன் நாட்டில் தங்கியிருப்பதாகவும் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார்.
பாஜகவின் வடக்கு மும்பை சிறுபான்மை செல்லின் தலைவரான ரூபல் ஜோனு ஷேக் என்பவர் ஒரு ஆதார் அட்டை மற்றும் பான் கார்டைப் பெற்று இருந்தார், ஆனால் பின்னர் மும்பை காவல்துறையினர் மேற்கு வங்கத்தில் 24 வடக்கு பர்கானாஸ் என்று அவரால் குறிப்பிடப்பட்ட முகவரி மற்றும் பள்ளி விவரங்கள் போலியானவை என்று கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.