மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் பேரணியில் கூடிய கூட்டத்தின் புகைப்படத்தை எடுத்து பிரதமர் மோடியின் பேரணியில் கூடிய பிரமாண்ட கூட்டம் என தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, பிறகு சிக்கிக்கொண்டு அந்த பதிவை நீக்கி உள்ளது பாஜக.
இடதுசாரிகள் கடந்த பிப்ரவரி 2019 இல் நடத்திய பேரணியின் புகைப்படத்தை தான் தமிழக பாஜக சுட்டு தங்கள் மோடிக்கு கூடிய கூட்டம் என பொய்யாக சித்தரித்து உள்ளது.
இந்திய அரசியல் வரலாற்றில் இது போன்ற கூட்டம் கூடியதே இல்லை , இதுவே முதல் முறை என ஓவராக பில்டப் கொடுத்து இறுதியில் பதிவை நீக்கி அசிங்கப்பட்டுள்ளது தமிழக பாஜக என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மமதாவின் மமதையை அடக்கிய கூட்டம் என்று பதிந்த தமிழக பாஜக, இறுதியில் பதிவை நீக்கியதன் மூலம் அடங்கி போயுள்ளது.