பொது மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதால் இந்த உயர்வு காரணமாக அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், பாஜக தலைவரும் பீகார் அமைச்சருமான நாராயண் பிரசாத் தெரிவித்துள்ளார்.
“பொது மக்கள் பெரும்பாலும் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள், ஒரு சிலர் மட்டுமே தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள்,” என்று திரு பிரசாத் கூறினார். மேலும் பொது மக்கள் இந்த விலை ஏற்றத்திற்கு எதிராக இல்லை அரசியல்வாதிகள் தான் விலையேற்றத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி நிற்கின்றார் என்றார் அவர்.
மக்கள் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு மக்கள் பழகி போய்விட்டனர் என்றும் பாஜக தலைவர் பிரசாத் கூறினார்.
“இது என்னையும் பாதிக்கிறது தான், எனினும் மக்கள் அதைப் பழக்கப்படுத்திக்கொள்வார்கள்” என்று பிரசாத் மேலும் கூறினார்.
இதற்கிடையே, எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) எம்.எல்.ஏ முகேஷ் ரவுஷன் வெள்ளிக்கிழமை பாட்னாவில் உள்ள மாநில சட்டசபைக்கு சைக்கிளில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.