Indian Judiciary Kerala

கேரளா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் பாஜக வில் இணைந்தனர்..

கேரள உயர்நீதிமன்றத்தின் இரண்டு முன்னாள் நீதிபதிகள், பி.என்.ரவீந்திரன் மற்றும் வி.சிதம்பரேஷ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

நீதிபதி ரவீந்திரன் 2007 முதல் 2018 வரை கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். நீதிபதி சிதம்பரேஷ் 2011 ல் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று , 2019 ஆம் ஆண்டில் ஓய்வுபெறும் வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.

முன்னதாக ”பிராமணர்கள் முன் ஜென்ம நல்வினையால் இரு முறை பிறப்பவர்கள்.. எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்’‘ என கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சமயத்தில் சிதம்பரேஷ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம், கேரள உயர்நீதிமன்றத்தின் மற்றொரு முன்னாள் நீதிபதி, பி கெமல் பாஷா, கேரள அரசியலில் நுழைய ஆர்வம் தெரிவித்தார்.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப் ) தனக்கு எர்ணாகுளம் மாவட்டத்தில் சீட் வழங்கினால் தான் போட்டியிட தயார் என அவர் தெரிவித்தார். பாஷா 2013 முதல் 2018 வரை கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.