நரேந்திர மோடி தான் அப்துல் கலாம் அவர்களை இந்திய ஜனாதிபதியாக ஆக்கினார் என மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
டாக்டர் அப்துல் கலாம் 2002 ல் இந்தியாவின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தார், நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார்.
புனேவில் நடைபெற்ற பாஜகவின் யுவ மோர்ச்சாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். நரேந்திர மோடி ஒருபோதும் முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டவில்லை என்றும் அவர் கூறினார்.
இவரின் இந்த நகைப்புக்குரிய பேச்சை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.