உபி க்கு அடுத்த நிலையில் பாஜக ஆளும் மாநிலமான மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
அந்த வரிசையில் கடந்த பிப்ரவரி 18, அன்று நான்கு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த 20 வயது பெண்ணை, நால்வர் அடங்கிய குழு கடத்திக்கொண்டு போய் அவளுக்கு வலுக்கட்டாயமாக மதுவை அருந்தவைத்து, அவள் மயங்கிய நிலையில் நால்வருமாக கூட்டுப்பாலியல் செய்து மறுநாள் பிப்ரவரி 19, அன்று பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது வீட்டு வாசலில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
சஹ்தோல் மாவட்டத்தில் ஜைட்பூர் மண்டலத்தின் பாஜக நிர்வாகி விஜய் திரிபாதி தான்முக்கிய குற்றவாளி ஆவார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண், முதல் குற்றவாளியாக பாஜக நிர்வாகி விஜய் பெயரை குறிப்பிட்டு போலீசில் புகாரளித்துள்ளார் . இந்நிலையில் வேறு வழி இல்லாமல் பாஜக , திரிபாதியை பதவி நீக்கம் செய்தது. பிரச்னை பெரிதாகும் என்று அஞ்சிய சஹ்தோல் மண்டலத்தின் பாஜக தலைவர் கமல் பிரதாப் சிங் அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கியுள்ளார். தற்போது அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.