Farm laws Union Government

‘நாட்டை காக்க மூன்று யுத்தங்களில் பங்கெடுத்த என்னை தீவிரவாதி என கைது செய்கின்றனர்’ – குர்முக் சிங் வேதனை..

விவசாயிகளு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்ற காரணத்திற்காக தீவிரவாதி பட்டம் சூட்டப்பட்டுள்ளார் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர்.

குர்முக் சிங், 80 வயதான இவர், இந்திய இராணுவத்தில் சுமார் 22 வருடங்கள் பணியாற்றி ,மூன்று பெரிய யுத்தங்களில் பங்கேற்றவராவார்.

பஞ்சாபின் ஃபத்தேகர் சாஹிப் கிராமத்தில் வசிக்கும் அவரை தற்போது ஸூம் மீட்டிங் வாயிலாக சந்தித்து பேட்டி கண்ட இளைஞர்களுக்கு அவர் கொடுத்த தகவல் கீழே வருமாறு..

மோடி அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் பஞ்சாப் விவசாயிகள் பெரிய அளவில் போராட்டம் ஒன்றினை கையிலெடுத்தனர். டெல்லியை நோக்கி படையெடுத்த அவர்களை தடுத்து நிறுத்த பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்தும் அளவுக்கு சம்பவங்கள் நெருக்கடிக்கு உள்ளாயின, ஆகவே சிங்கு எல்லையில் நிரங்கரி மைதானத்தில் குழுமிய பஞ்சாபி விவசாயிகள் தொடர்ந்து இன்று வரை தங்களது அமைதிப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி் வருகின்றனர்.

மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு கடுமையாகி தாக்கப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன் என்கிறார் குர்முக்.

இதில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் கடந்த மாதம் 26ந்தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் போராட்டத்திற்கு அழைப்புவிடப்பட்ட நிலையில் அருகிலுள்ள மாவட்டங்களான ஹரியாணா,குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருந்தும் பஞ்சாபி விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகள் சேர்ந்து கொண்டு, செங்கோட்டையை நோக்கி பேரணி நடத்தினர், அதில் விஷமிகள் சிலரால் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில் நம் இராணுவ வீரர் குர்முக் சிங் கைது செய்யப்பட்டார்.

அமைதி வழியில் போராடிய அவரது குழுவை சேர்ந்தவர்களை போலீசார் சட்டையை பிடித்து இழுத்தும் காலில் போட்டு மிதித்தும் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி பிப்ரவரி 1, அன்று சுமார் 122 பேரை கைது செய்தனர் இதில் குர்முக் சிங் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார், பிப்ரவரி 13, அன்று ஜாமினில் வெளிவந்த குர்முக் சிங் அவர்களை சந்தித்து பேட்டிகண்டனர் இளைஞர்கள்.

எங்களை விவசாயிகள் என்றோ, வயது மூத்தவர்கள் என்றோ, தேசத்திற்காக ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்றோ எவ்வித மரியாதையும் கொடுக்காமல், எங்கள் மீது லத்தி சார்ஜ் செய்தும், சட்டையை பிடித்து இழுத்து கிழித்தும், தரையில் தள்ளி பூட்ஸ்களால் மிதித்தும் இறுதியில் பத்திரிக்கைகளில் எங்களை தீவிரவாதி என்றும் பட்டங்கள் கொடுத்தும் இழிவு செய்ய தெரிந்த அரசுக்கு தேசத்தின் உயிர்மூச்சான விவசாயத்தை காப்பாற்றும் எங்களின் கோரிக்கையை ஏற்கவோ அதற்கு மாற்றுவழி செய்யவோ மனமில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.